fbpx

திடீர் ட்விஸ்ட்..!! அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்..!! ’இனிதான் ஆட்டமே இருக்கு’..!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டங்களின் முடிவுபடி ‘குரூப் 2’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் ஆட்டம் இன்று அடிலெய்டில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய வங்காளதேசம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களே எடுத்தது. இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் அரையிறுதிக்கு முன்னேறி விடலாம் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி தனது இன்னிங்சை துவங்கியது. இறுதியில் அந்த அணி 18.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

திடீர் ட்விஸ்ட்..!! அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்..!! ’இனிதான் ஆட்டமே இருக்கு’..!!

நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில் 4-வது அணியாக பாகிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. அரையிறுதி சுற்றில் இந்தியா-இங்கிலாந்து, பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோத வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Chella

Next Post

’என்னதான் இருந்தாலும் அது என்னோட Wife’..!! சமந்தாவை சந்தித்து பேசிய கணவர் நாக சைதன்யா..!!

Sun Nov 6 , 2022
நாக சைதன்யாவும், சமந்தாவும் தங்களுடைய விவாகரத்து முடிவை கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நாக சைதன்யா, சமந்தாவை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்வில், சில பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால், இவர்கள் இருவரும் விருப்பப்பட்டு விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தங்கள் படங்களில் பிஸியாக […]
’என்னதான் இருந்தாலும் அது என்னோட Wife’..!! சமந்தாவை சந்தித்து பேசிய கணவர் நாக சைதன்யா..!!

You May Like