அசல் கோலார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின், பெண்களிடம் எல்லை மீறும் மற்றொரு போட்டியாளர் குறித்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பம் முதலே விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நபராக வந்த ஜிபி முத்து, முதல் நபராகவே வெளியேறிவிட்டார். அதன்பிறகு, சாந்தி மற்றும் அசல் கோலார் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இந்த வார எலிமினேஷன் பட்டியலில் விக்ரமன், அசீம், ஆயிஷா, செரினா மற்றும் கதிர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வார இறுதியில் அசல் கோலார், எலிமினேட் செய்யப்பட்டார். அவர் வீட்டில் பல பெண்களை அனுமதி இல்லாமல் தொடுவது உள்ளிட்ட பல சில்மிஷ வேலைகளை செய்தது சர்ச்சையான நிலையில், மக்களை அவரை வெளியேற்றினர். அவர் வெளியே போனதற்கு நிவாஷினி தான் கதறி கதறி அழுதார். அதை பார்த்து நெட்டிசன்களும் அவரை விமர்சித்தனர்.
இந்நிலையில், தற்போது அசல் செய்த அதே வேலையை மற்றொரு போட்டியாளர் தொடங்கி இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை. ராம் ராமசாமி தான். அவர் ஜனனியிடம் எல்லை மீறும் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.