ரன்பீர்-ஆலியாபட் தம்பதியினருக்கு நேற்று குழந்தை பிறந்த நிலையில் குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் ரன்பீர் கபூர்-ஆலியாபட் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் 2 மாதத்தில் தங்களுக்கு விரைவில் வாரிசு வரப்போவதாக மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தனர். இந்நிலையில் திருமணமாகி 7 மாத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. இதனால் வழக்கம் போல நெட்டிசன்கள் வதந்தியை கிளப்பியுள்ளனர்.
ஒருபுறம் அவர்களுக்கு குறை பிரசவம் நடந்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகின்றது. அப்படி குறை பிரசவம் இல்லை என்றால் திருமணத்தின்போதே ஆலியா கருவுற்றிருந்தாரா என்ற கேள்வியும் வதந்தியும் சமூக வலைத்தலங்களில் சுற்றி வருகின்றது.
கடந்த ஒரு மாத்திற்கு முன்புதான் வளைகாப்பு புகைப்படம் என்று ஆலியா-ரன்பீர் தம்பதியினர் தெரிவித்தனர். நேற்று மாலை தங்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்ததாக ரன்பீர் கபூர்- ஆலியாபட் தம்பதியினர் தகவல் வெளியிட்டனர்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகு ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஆலியா பட், ‘ஹார்ட் ஆப் ஸ்டோன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ என்ற இந்தி திரைப்படத்திலும் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடிக்க உள்ளார்.