ஆசரியர் தேர்வில் தேர்வாளர் நுழைவு சீட்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக சன்னி லியோன் படம் வந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
கர்நாடகாவில் நடந்த ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தேர்வர் ஒருவர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய பதிவெண்ணை செலுத்தினார்.நுழைவு சீட்டும் வந்தது. ஆனால், அதில் இருந்த படத்தில் இருந்த நபர் சன்னிலியோன். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் குழப்பமானார்.
இந்த அனுமதிச்சீட்டை சமூக வலைத்தளத்தில் அந்த பெண் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, விசாரணை நடத்த கர்நாடக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது புகைப்படத்தை சம்மந்தப்பட்ட தேர்வர்தான் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பியபோது ஏதாவது தவறுதலாக மாற்றி பதிவேற்றம் செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
எனினும் எவ்வாறு இது போன்ற தவறுகள் நேர்கின்றது என்பது கண்காணிக்கப்படுகின்றது. கல்வித்துறை உத்தரவை அடுத்து தேர்வர்களின் நுழைவுச் சீட்டுளில் குளறுபடி இருந்தால் தேர்வுத்துறையை அணுக உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பிறந்த சன்னி லியோன், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் ஆபாச படங்கிளல் நடித்து வந்தார். பின்னர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி கவர்ச்சி கன்னியாக வலம் வருகின்றார்.