fbpx

கருணாஸ் உடன் நடித்த நடிகைக்கு பிடிவாரண்ட்…

போலி சாதி சான்றிதழ் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகையும் முன்னாள் எம்.பியுமான நவ்நீத் ரானாவுக்கு பிடிவாரண்ட் வழங்கப்பட்டுள்ளது.

அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யாக இருந்தவர் நவ்னீத் ரானா. தமிழில் கருணாஸுடன் அம்மா சமுத்திரம் அம்பானி திரைப்படம் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். எனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் அவர் போலி சான்றிதழ் கொடுத்துள்ளார். மும்பை முல்லுண்டு காவல்நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.

 இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நவ்நீத் ரானாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டை செயல்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என போலீசார் கேட்டுள்ளனர். இதனை நிராகரித்த மாஜிஸ்திரேட்டு மோகாஷி, நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தைக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத புதிய பிடிவாரண்டை பிறப்பித்தார்.

மேலும் பிடிவாரண்ட் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Next Post

விஜய் நடித்த ’’வெற்றி’’ திரைப்படம் வைரல்…

Wed Nov 9 , 2022
பொங்களுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சமூக வலைத்தலங்களில் ’வாரிசா’ ’துணிவா’ என்ற விவாதம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் இருதரப்பு ரசிகர்களும் டுவிட்டர் சண்டையிட்டு வரும் நிலையில் விஜய் சினிமாவுக்கு வர அப்பாவே காரணம் என ஒரு தரப்பு வாதிட்டு வருகின்றது. மற்றொரு பக்கம் அவர் தனது தனித்திறமையால்தான் வளர்ந்துள்ளார் என ஒரு பக்கம் வாதிட்டு வருகின்றனர். இதனிடைய குழந்தை நட்சத்திரமாக ’வெற்றி’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் அறிமுகமான […]

You May Like