வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால் 24 மணி நேரத்திற்கு வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் எளிதாக திரும்பப் பெற முடியும்.
சென்னையில் சைபர் குற்றங்கள் அதிகரித்த வரும் நிலையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் ஓ.டி.பி. பெற்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் பெருகி வருகின்றது.
இது போன்ற மோசடியின் போது உடனடியாக எப்படி புகார் செய்வது என தெரியாமல் பொதுமக்கள் தவிக்கின்றார்கள். எனவே வங்கிப் பணம் மோசடி தொடர்பாக புகார் செய்ய வசதியாக உதவி எண்ணை சைபர குற்றப்பிரிவு போலீசார் பதிவிட்டுள்ளனர். 155260 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரலாம். இது குறித்து சைபர் குற்றப்பிரிவி போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் ’’ உங்களின் வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால் 155260என்ற எண்ணிற்கு உடனடியாக புகார் செய்யலாம். ஏ.டி.எம்.களில் தவிர ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோனால் இதில் புகாரளிக்கலாம்.
எவ்வளவு சீக்கரம் புகார் செய்கின்றீர்களோ அவ்வளவு விரைவில் உங்கள் பணம் மோசடி நபர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்கில் தடுத்து நிறுத்தப்படும்.
ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்ய சுமார் அரை மணி நேரம் ஆகும். எனவே புகார் செய்தால் அதற்குள் மீட்கமுடியும்.