fbpx

பிரபல நடிகைக்கு மூளையில் ஏற்பட்ட  ரத்தக்கசிவு…

பிரபல நடிகை அந்த்ரிலா ஷர்மாவுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் பெங்காளி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் அந்த்ரிலா ஷர்மா(24). இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனவே இரண்டுமுறை இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அவரது தோழி ஒருவர் சமூக வலைத்தலத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அவரது உடல் நிலை மோசமாக உள்ளது என தகவல் வந்துள்ள அதிர்ச்சியளிக்கின்றது. அவள் வலிமையான பெண், எதற்கும் துணிந்தவள் , போராடுவாள். புற்றுநோயில் இருந்து இரண்டுமுறை மீண்டு வந்துள்ளாள். இப்போதும் அவள் மீண்டு வருவாள். என நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Next Post

இந்தியா-இங்கிலாந்து ஆட்டம்… வைரலாகும் மீம்ஸ்கள்!!

Thu Nov 10 , 2022
டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளை மீம்ஸ்களாக உருவாக்கி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது ஒரு புறம் இருக்க இந்திய ரசிகர்கள் இதனை தங்களுக்கு தாங்களே தேற்றிக்கொள்ளும் விதமாகவும். இந்திய அணி வீரர்களை கலாய்த்தும் வரும் மீம்ஸ்கள் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றது. இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் அதைப்பற்றியும் வீடியோ மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அசால்ட்டாக விளையாடி இருப்பதாக வீடியோ மீம் […]

You May Like