பிரபல நடிகை பிபாஷா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தலங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நடிகை பிபாஷா பாசு மற்றும் நடிகர் கரண் சிங் ஒன்றாக நடிக்க ஆரம்பித்தபோதே காதலித்தனர். இதையடுத்து கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராமில், தான் கருவுற்றிருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு தகவலை பரிமாறிக் கொண்டார்.
இந்நிலையில் பிபாஷா பாசுவுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் பிபாஷா பாசுவுக்கும் தந்தையான கரண் சிங்கிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை பிபாஷா பாசு தமிழ் சினிமாவில் விஜய் உடன் ’சச்சின்’ என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் வேறு எந்த திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை. பாலிவுட்டில் அதிக படங்களை நடிக்கத் தொடங்கினார். புகழ்பெற்ற நடிகையாகவும் வலம் வருகின்றார்.