fbpx

திருமணம் செய்து வைக்காத தாயை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கொடூர மகன்..!! சிக்கியது எப்படி..?

’எனக்கு ஏன் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கவில்லை’ என பெற்ற தாயையே மகன் கொலை செய்த கொடூரம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநில தலைநகரான போபாலில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் பலத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 67 வயதான அந்தப் பெண்மணி எப்படி உயிரிழந்தார் என போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. ஓய்வுபெற்ற ஆசிரியையை அவரது மகனே கொலை செய்தது தெரியவந்தவுடன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

திருமணம் செய்து வைக்காத தாயை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கொடூர மகன்..!! சிக்கியது எப்படி..?

கோபால் நகரில் தனது தாய், அண்ணன் மற்றும் அண்ணி ஆகியோருடன் வசித்து வந்தார் அப்துல் அஹத் பரான் (32). வேலைக்கு செல்லாத நிலையில், அடிக்கடி அப்துல் அவரது தாயை செலவுக்கு பணம்கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனது செல்போனை பார்ப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வந்த அப்துல், தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும்படி தனது தாய் அஸ்மா ஃபரூக் மற்றும் குடும்பத்தினரை எச்சரித்துள்ளார். அப்துலை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை எனத் தெரிகிறது.

திருமணம் செய்து வைக்காத தாயை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கொடூர மகன்..!! சிக்கியது எப்படி..?

இந்நிலையில், தனது அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் வீட்டில் இல்லாத சமயத்தில், தாய் அஸ்மா ஃபரூக்கை கடுமையாக தாக்கியுள்ளார் அப்துல். அண்ணன் அத்தா உல்லா மற்றும் அண்ணி இருவரும் வீடு திரும்பியபோது, அஸ்மா ஃபரூக் கடுமையாக காயமடைந்திருப்பதை கண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். அப்போது அப்துல் தனது தாயார் மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அஸ்மா ஃபரூக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் எனத் தெரிவித்து, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

திருமணம் செய்து வைக்காத தாயை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கொடூர மகன்..!! சிக்கியது எப்படி..?

பின்னர் பிரேத பரிசோதனையில் அஸ்மா ஃபரூக் கடும் தாக்குதலுக்கு உள்ளானது தெரியவந்த நிலையில், போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். அப்போது அப்துல் குறித்த தகவல்கள் தெரிய வர, அவரை விசாரித்து கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் அப்துல் தனது தாயை, கிரிக்கெட் மட்டை மற்றும் உலோகக் கம்பி ஆகியவற்றால் அடித்தே கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. ஓய்வு பெற்ற ஆசிரியை தனது ஓய்வூதியத்தில் இருந்து அடிக்கடி அப்துலுக்கு செலவுக்கு பணம் கொடுத்து வந்தார் என்றும், வேலைக்கு போகாத மகன் அடிக்கடி தனது தாயிடம் வன்முறையில் ஈடுபட்டதையும் அவரது அண்ணனே போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

BEL நிறுவனத்தில் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…! B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Sun Nov 13 , 2022
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Deputy Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.Eதேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு பிரிவிற்கு ஏற்றாற்போல் வயது தளர்வுகள் […]

You May Like