’’இரவின் நிழல்’’ திரைப்படம் குறித்த சர்ச்சைகளை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். முதலில் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் திரைப்படத்தை பாருங்கள் பின்னர் முடிவை எடுங்கள் என நடிகர் பார்த்திபன் கூறியிருக்கின்றார்.
கோலிவுட் திரை உலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் நான் லீனியர் முறையில் படம் ஆக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமாக வெளியான இரவின் நிழல் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அண்மையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியானது.
இப்படம் உலகின் முதல் ’’நான் லீனியர்’’ சிங்கிள் ஷாட் திரைப்படம் என்பதை நடிகர் பார்த்திபன் திரைக்கு வந்த நாளிலிருந்து விளம்பரம் செய்து வந்தார். ஆனால் இதனை அமேசான் ப்ரைம் நிறுவனம் இது முதல் படம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.
இதனால் நடிகர் பார்த்திபன் இந்த சர்ச்சையை குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், இதுதான் முதல் படம் என்பதில் சந்தேகமே இல்லை என்பதை உறுதியுடன் திட்டவட்டமாக அப்பதிவில் மீண்டும் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.