அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் வானிலையில் மாற்றங்கள் ஏற்படுவதுபற்றிய தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு இங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் வானிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வங்கக்டகலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இந்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு நோக்கி நகர்கின்றது.
இந்நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்த பின்னர் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே பார்க்க முடியும் என்றார்.
தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வரும் நாட்களில் நல்ல மழை எதிர்பார்க்கலாம். கொங்கு மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
நவம்பர் 20ஆம் தேதியில் இருந்து, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அது சூறாவளியாகவோ அல்லது தாழ்வு பகுதியாகவோ மாறலாம். இந்த ஆண்டில் மக்களை பெருமளவு தாக்க விருக்கும் பருவமழையை அது அளிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதை பற்றி முழுமையான விவரங்கள் அறிந்து கொள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு சில நாட்கள் தேவைப்படுகிறது, என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.