புறநகர் அல்லாத பகுதிகளில் யுடிஎஸ்ஆன்மொபைல் (UTSONMOBILE) செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள் வாங்குவதற்கான தூரத்தை ரயில்வே அமைச்சகம் 20 கிலோ மீட்டர் வரை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, புறநகர் பகுதிகளில் இந்த தூரம் 5 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புறநகர் அல்லாத பகுதிகளில் யுடிஎஸ் ஆன்மொபைல் செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பயணிகள் 5 கிலோ மீட்டர் வரை அனுமதிக்கப்பட்டிருந்தனர். புறநகர் பிரிவுக்கு யுடிஎஸ்ஆன்மொபைல் செயலி மூலம் பயணச் சீட்டுகளை பெறுவதற்கான தூரம் 2 கிலோ மீட்டராக இருந்தது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தை காணவும்: https://www.utsonmobile.indianrail.gov.in