ஆன்லைனில் பெரும்பாலானவற்றிற்கு பாஸ்வேர்டை மிகவும் எளிமையான ஒன்றாக வைத்திருப்பது, திருடர்களின் கையில் சாவியை கொடுப்பது போன்றுதான். அந்தவகையில் இந்தியாவில் என்னென்ன வார்த்தை பாஸ்வேர்டாக உள்ளது தெரியுமா?
ஆன்லைனில் டிஜிட்டல் அடையாளத்தை பாதுகாக்க மிக முக்கியமான கூறுகளின் ஒன்று கடவுச்சொல். பல நாடுகளில் எளிதான கடவுச் சொற்களைத்தான் பயன்படுத்துகின்றார்கள். இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன?. இந்தியாவிலும் பெரும்பாலும் மக்கள் மிக எளிதான கடவுச் சொற்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ’நார்ட்பாஸ்’’- என்ற நிறுவனத்தின் புதிய அறிக்கையில், இந்தியாவில் பயனர்கள் பயன்படுத்தும் 200 பொதுவான கடவுச் சொல் பற்றி தகவல் வெளியிட்டுள்ளது. பொதுவாக பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் கடவுச்சொல் 123456 என்பதுதான். ’’பிக்பாஸ்கெட்’ நான்காவது இடத்தில் இருந்தது. இது ஆன்லைன் மளிகை சேவை வழங்கி வருகின்றது. ஆனால், இதை பாஸ்வேர்டாக பயன்படுத்தவது பாதுகாப்பற்ற ஒன்று என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ‘googledummy’ என்ற வார்த்தை பத்தாவது இடத்தில் உள்ளது. மேலும் கிராக் செய்வதற்கு 23 நிமிடடங்கள் ஆகின்றது. 2வது இடத்தில் 123456 என்பதாகும். இதை கிராக் செய்ய ஒரு விநாடிக்கும் குறைவான நேரமே ஆகின்றது. 2021ன் தரவுகளுடன் நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது 2022ல் பொதுவான கடவுச் சொற்களில் 200 சொற்கள் அப்படியே உள்ளது. இது 73 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு பட்டியலில் 83 சதவீதம் கடவுச் சொற்களை ஒரு வினாடிக்கும் குறைவாக கிராக் செய்ய முடியும் என இந்த அமைப்பு கூறுகின்றது.
எனவே கடவுச் சொற்களை மிகவும் வலுவானதாக வைக்க வேண்டும். இதை உருவாக்க இங்கே 7 குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2017ம்ஆண்டின் புள்ளி விவர தகவல் படி இணையக் குற்றங்கள் மூலம் நுகர்வோர் இழப்பை சந்திக்கும் நான்காவது நாடாக இந்தியா உள்ளது. பல ஆண்டுகளாக சைபர் குற்ற விழிப்புணர் அதிகரித்து வருவதால் வலுவான கடவுச்சொல் அவசியம். எனவே உலகளாவிய 123456 போன்ற கவுச்சொற்களை தவிர்க்க வேண்டும். மேலும் ‘guest’, ‘qwerty’, ‘iloveyou’ ‘111111’ இது போன்ற கடவுச்சொற்களை ஹேக்கர்கள் விநாடியில் கிராக் செய்துவிடுவார்கள். எனவே இது போன்ற கடவுச் சொற்களை யாரும் பயன்படுத்த வேண்டாம்.
எந்த மாதிரியான கடவுச் சொற்களை பயன்படுத்தக்கூடாது…
- 1. password
- 2. 123456
- 3. 12345678
- 4. bigbasket
- 5. 123456789
- 6. pass@123
- 7. 1234567890
- 8. anmol123
- 9. abcd1234
- 10. googledummy
- 11. Indya123
- 12. qwerty123
- 13. sahilji1
- 14. 987654321
- 15. kapil*12345
- 16. 123456789a
- 17. p@ssw0rd
- 18. India@123
- 19. india123
- 20. 12345
கடவுச் சொற்கள் பலவீனமாக இருந்தால் என்ன பிரச்சனை?
’password’ அல்லது ’123456’ இது போன்ற கடவுச் சொற்களை பயன்படுத்துவது ஹேக்கர்களால் எளிதாக யூகிக்க கூடிய கடவுச் சொற்கள். இதெல்லாம் யூகிக்க கடினமாக இருக்கும் என நீங்கள் நினைக்க வேண்டாம். ஏனெனினில்இதற்காக மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றது. சக்திவாய்ந்த கருவிகள் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இவற்றை எளிதாக கிராக் செய்துவிட முடியும். எனவே வெவ்வேறு கடினமான கடவுச் சொற்களை வைப்பதால் இதை மென்பொருளால் அவ்வளவு எளிதாக கிராக் செய்ய முடியாது.
டாம்ஸ் ஹார்ட்வேர் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. இதில் GPU, RTX 4090 போன்றவை வலுவான கடவுச் சொற்களே சில நாட்களில் ஒரு மணி நேரத்திற்குள் கிராக் செய்ய முடியும். பலர் சிரமமான கடவுச் சொற்களை பயன்படுத்தவது கிடையாது. சிக்கலான கருவிகளை பயன்படுத்தாமல் தாக்குபவர்கள் யூகிக்க கூடியவை.
இதில் இருந்து எவ்வாறு நாம் பாதுகாப்பாக இருப்பது?
முதலில் ஆன்லைன் கணக்குகளை அறிந்து கொள்ளுங்கள். மின்னஞ்சல் ஐடிக்கள் போன்ற மறந்துவிட்ட கணக்குகள் உங்கள் டிஜிட்டல் கடவுச் சொற்களை பாதுகாப்பதற்கு எளிதானவையாக இருக்காது. வலுவான கடவுச்சொற்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும். எழுத்துக்கள், எண்கள், சின்னங்கள் ஆகியவற்றின் கலவையாக வைத்துக் கொள்ளுங்கள். சீரற்றதாகவும் இருக்க வேண்டும். அனைவரும் பயன்படுத்தக்கூடிய சொல்லாகவே, ஒரு வரிசையாகவோ, வார்த்தையாகவோ, வாக்கியமாகவோ இருக்ககூடாது. அல்லது அதன் அடிப்படையில் உருவாக்க கூடாது.
‘pass@123’ என்பது எழுத்துக்கள், எண்கள் மற்றும் சின்னம் கொண்ட கடவுச்சொல். இது 34வது பொதுவான கடவுச்சொல் பட்டியலில் உள்ளது. இந்தியாவில் இது 6ம்இடத்தில் உள்ளது. மற்றொன்று ‘p@ssw0rd’ இதுவும் மிகவும் எளிமையான கலவையான கடவுச்சொல். ஆனால் பாதுகாப்பில்லாதது. எனவே யூகிக்க முடியாத அளவிற்கு தனித்துவ கடவுச்சொற்களை நீங்கள் நினைவில் வைத்து அமைக்க வேண்டும்.