fbpx

வீட்டு உபயோக சிலிண்டரிலும் வருகின்றது QR Code…!!

வளர்ந்து வரும் டிஜிட்டல் துறைக்கு ஏற்ப தற்போது அனைத்து இடங்களிலும் பணம் செலுத்துவதற்கு QR Code வந்துவிட்டது. அடுத்த கட்டமாக  பாதுகாப்பிற்காக  இத்திட்டம் வீட்டு உபயோக சிலிண்டர்களில் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிலிண்டர் திருடுபோதல் மற்றும் இதில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கவும் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தவும் QR Code பயன்படுத்தப்படுகின்றது. விரைவில் எல்.பி.ஜி. சிலிண்டர்களில் QR Code வசதிகள் வழங்கப்படும் என்றும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மத்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறி உள்ளார்.

QR Code மூலமாக ட்ராக் செய்து கொள்ளலாம். சிறந்த நிர்வாகத்தையும் நிர்வகிக்க முடியும். சிலிண்டரில் வெல்டிக் செய்யப்பட்டு அநத இடத்தில் QR Code ஸ்டிக்கரை ஒட்டிவைக்க வேண்டும். பின்னர் இது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இது தொடர்பாக ஹர்தீப் பூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் இந்த QR Code எவ்வாறு செயல்படுகின்றது என்பது பற்றிய விளக்கத்தை அதிகாரிகளிடம் கேட்கின்றார்.

QR Code பொறிக்கப்பட்ட இந்த சிலிண்டர்கள் முதல் கட்டமாக 20,000 சிலிண்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிப்படியாக அனைத்து 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர்களிலும் பொருத்தப்படும். இது சிலிண்டருக்கு பாதுகாப்பை வழங்கும். திருடுபோனால்இதை வைத்து கண்டுபிடிக்க முடியும் இது சிலிண்டர்களுக்கு மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமும் கூட.

Next Post

அண்ணாமலை தலைமையில் கூடலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்…!!

Thu Nov 17 , 2022
இலங்கையில் இருந்து வந்த தமிழ் குடும்பங்களை அகதிகளாக முகாமில் வைக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து 20-ம் தேதி கூடலூரில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ’’இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 15,000 பேர் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்கள். இவர்கள் […]
பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அண்ணாமலை..? புதிய தலைவர் இவர்தானாம்..!!

You May Like