பூசணி விதைகள் உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் செய்கின்றது என தெரிந்தால் நீங்கள் சமைக்கும் போது இதை தவிர்க்கவே மாட்டீர்கள்.
ஏற்கனவே பூசணி விதை குறித்த பதிவு போடப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு வாசகர்கள் எவ்வாறு பூசணி விதையை எடுத்துக்கொள்ளலாம் என கேள்விகள் எழுப்பியுள்ளனர். இதற்கு இந்த பதிவில் பல்வேறு நன்மைகளுடன் சாப்பிடும் முறையை பற்றி பார்க்கலாம். ஏற்கனவே வந்த பதிவை காண்பதற்கு கீழ்கண்ட லிங்கை சொடுக்கவும்.
பூசணி விதைகள் மிகவும் சுவையாக இருக்கும். அத்துடன் ஊட்டச்சத்து நிறைந்து காணப்படும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுதவிர பல்வேறு நன்மைகளை அளிக்கின்றது. உடல் எடையை குறைக்குமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. உடல் எடையை குறைக்கும் ஒரு அற்புதமான பொருள் பூசணி விதை. பூசணி விதை நீள்வட்டமாக இருக்கும். இதை நாம் தனித்தனியே எடுத்து காயவைத்து நண்பகல் நேரத்தில் சாப்பிடலாம். சாப்பிடும் முன்பு கனமான தோலை நாம் நீக்கிவிட வேண்டும்.
இது குறித்து மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில், ’’இதனை ஸ்நாக்ஸ் ஆக நாம் எடுத்துக்கொள்ளலாம். இதனால் நம்முடைய உடல் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் பெறுகிறது. பூசணி விதைகளில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. அதனால் இது மிக சிறந்த ஊட்டச்சத்து உணவாக இருக்கிறது. எனினும், அளவோடு இதனை நாம் எடுத்துக்கொள்ளும்போது எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.” என்கிறார்.
நம்முடைய உடலுக்கு பூசணி விதைகள் ஆரோக்கியமானது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. இதனை நாம் ஒவ்வொரு முறை எடுத்துக்கொள்ளும்போதும், நமக்கு 151 கலோரிகள் (30 கிராம்) கிடைக்கின்றன. இதனில் அதிகளவிலான புரதச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளது. வேறு என்னவெல்லாம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதனை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
- நார்ச்சத்து: 1.5 கிராம்
- கார்போஹைட்ரேட்: 2.10 கிராம்
- புரதச்சத்து: 3.70 கிராம்
- கொழுப்பு: 6.80 கிராம்
- சர்க்கரை: 0.20 கிராம்
பூசணி விதை சிறந்த அளவிலான ஆக்சிஜனேற்ற பண்பும், பல்கொழுப்பு அமிலங்களும் , பொட்டாசியமும், வைட்டமின் பி யும் போலேட்டும் உள்ளது. இதை சேர்த்து, பல ஆரோக்கிய பலன்களை அளிக்கும் கவலைகள் உள்ளது. மேலும் பூசணி விதைகளை தோல் நீக்கிவிட்டு கடைகளில் விற்கப்படுகின்றது. அதை ஸ்நாக்ஸ் போன்று வாங்கி சாப்பிடலாம். அல்லது வீட்டிலேயே பூசணி விதையை எடுத்து காய வைத்தும் பயன்படுத்தலாம்.
நார்ச்சத்து நம்முடைய செரிமான மண்டலத்துக்கு உதவுகிறது. இதனால், நமக்கு உண்டாகும் பசியையும் குறைக்கக்கூடியது. வயிறு முட்ட சாப்பிடாமல் இருக்க இது நமக்கு உதவி செய்கிறது. எனவே எடையை இழப்பதென்பது நமக்கு எளிதாகிறது. துத்தநாகம் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனால் நாம் எடையை இழப்பதோடு, எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தையும் பெறுகிறோம்.
பூசணி விதைகளில் வைட்டமின் E மற்றும் கரோட்டினாய்டு ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. இது நச்சு முறிவு பண்பினை கொண்டுள்ளது. கரோட்டினாய்டு நம்முடைய உடல் எதிர்ப்பு சக்திக்கு உதவி, நோயின்றி பாதுகாக்கிறது. மேலும், கரோட்டினாய்டு கொலோஜனை தூண்டி தோல் மீள்திறனுக்கு உதவுகிறது. கூடுதலாக, இதனில் இருக்கும் நச்சு முறிவு பண்பு, பாதுகாப்பற்ற கூறுகளில் இருந்து நம்மை காத்து, அழற்சி ஏற்படாமலும் பார்த்துக்கொள்கிறது.
ஆக்சிஜனேற்ற பண்பு, துத்தநாகம், மெக்னீசியம் அடங்கிய இந்த சூப்பர் உணவு, இதயத்தை நோயில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், பூசணி விதைகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை உங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ளும்போது, உங்களின் இரத்தத்தில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடு அளவு அதிகரிக்கிறது. ஆய்வின் முடிவுப்படி, இதய ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை இது ஏற்படுத்துவதாக சொல்லப்பட்டுள்ளது.
பூசணி விதைகள் பலவித நன்மைகளை கொண்டது. இதனை எதுவும் செய்யாமல், அப்படியே உப்பு சேராத வகைகளை எடுத்துக்கொள்ளும்போது, எண்ணற்ற பயன்களை அடைகிறோம். இதனை உணவில் சேர்த்துக்கொள்ள பல வழிகள் நமக்கு உள்ளது.
- இதனை ஸ்மூத்தி, தயிர் போன்றவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்
- இதனை ஊத்தப்பமாக செய்து சாப்பிடலாம்
- பிரெட் அல்லது கேக்குகளுடன் சேர்த்து சாப்பிடலாம்
- இதனை லேசாக வறுத்தும் நாம் சாப்பிடலாம்
பூசணி விதைகளை 15 கிராம் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அளவாக மட்டுமே இதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பூசணி விதைகளை அளவுக்கதிகமாக சாப்பிட்டால் வாய்வு தொல்லை மற்றும் வயிறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
அளவோடு இதனை நாம் எடுத்துக்கொள்ளும்போது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். ஆனால், அதிகமாக எடுத்துக்கொண்டால், இதனில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை உண்டாக்கும். மேலும், கூடுதலாக எடுத்துக்கொள்ளும்போது எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.