fbpx

நியூசிலாந்து-இந்தியா இன்றைய ஆட்டம் ரத்து…

நியூசிலாந்தில் வெலிங்டன் மைதானத்தில் நடக்கும் போட்டி மழையின் காரணமாக டாஸ் கூட போடாமலேயே ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல்நாள் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் 12 மணியில் இருந்து மழை விடுமா என காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித், விராட், ராகுல், அஸ்வின், ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த போட்டி நடைபெறுகின்றது.

இந்த அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான், சுப்மான், ஸ்ரேயாஸ், பண்ட் போன்ற வீரர்கள் உள்ளனர். உலக  கோப்பையில் சூரியகுமாருக்கு 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன் குவித்தவரான பாகிஸ்தான் வீரர்முகமது ரிஸ்வானின் சாதனையை முறியடிக்க இன்னும் அவர் 286 ரன்கள் எடுக்க வேண்டும் இந்த தொடரில் அதை நெருங்குவதற்கான வாய்ப்பாக இந்த போட்டி பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அடுத்த போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிங்டன் நகர வானியை பொறுத்தவரை காலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் போட்டி இரவு நேரம் என்பதால் அந்த சமயத்தில் மழை இருக்காது என கூறப்படுகின்றது. எனினும் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆட்டத்தின் போதும் மழைக்கான வாய்ப்பு அதிகம் என்றே கூறப்படுகின்றது.

Next Post

டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக மூடப்படுகின்றது!! பரபரப்பு !!

Fri Nov 18 , 2022
எலான்மஸ்க் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளதால் திணறிய டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சமூக வலத்தலமான டுவிட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்தினார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் தொடர்ந்து சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். அவர் அதிக லாபத்திற்காக தொடங்கவில்லை திவாலாவதை எதிர்கொள்ள நேரிடும் என கூறி பல மாற்றங்களை செய்தார். வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் கொள்கைளில் […]
’நான் பதவி விலக வேண்டுமா’..? ட்விட்டரில் கருத்துக் கணிப்பு கேட்கும் எலான் மஸ்க்..!

You May Like