’Cooku with Comali’ பிரபலம் ரித்திகாவுக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.
இளைஞர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக, சின்னத்திரை இளம் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி அமிர்தாவை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வினோதினி என்கிற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ரித்திகா. ஆனால், அதன் பின்பு சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக தற்போது வளர்ந்து நிற்கிறார். விஜே, டான்ஸ், பாட்டு, ரியாலிட்டி ஷோ, குக்கிங் ஷோ என ரித்திகா தனது பல திறமைகளை வெளிக்காட்டி இருக்கிறார்..
![’Cooku with Comali’ பிரபலம் ரித்திகாவுக்கு இன்று டும் டும் டும்..!! ரசிகர்கள் வாழ்த்து..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-20-at-9.15.49-AM.jpeg)
குறிப்பாக இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் அமிர்தா ரோல் பட்டி தொட்டி எங்கும் இவரை கொண்டு சேர்த்தது. குடும்ப வறுமைக்காக சினிமா பக்கம் வந்தவர் இன்று வளர்ந்து தனது குடும்பதையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார். ரித்திகா நடத்தி வரும் யூடியூப் சேனலில் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்களை அவர் ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார். இந்நிலையில், விஜய் டிவியில் பணியாற்றும் வினு என்பவருடன் இன்று ரித்திகாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
![’Cooku with Comali’ பிரபலம் ரித்திகாவுக்கு இன்று டும் டும் டும்..!! ரசிகர்கள் வாழ்த்து..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-20-at-9.15.50-AM.jpeg)