ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே சங்கராந்தி(பொங்கல்) ரிலீஸில் முன்னுரிமையில் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும், டப்பிங் படங்களுக்கு மீதம் இருக்கும் தியேட்டர்கள் தான் தரப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி, விஜய் நடிக்கும் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.
வாரிசு படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ஆனால், பொங்கலுக்கு சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாக இருப்பதால் விஜய் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி வாரிசு படத்தை ஆந்திராவில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு சீமான் தொடங்கி லிங்குசாமி வரை சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்நிலையில் கஞ்சா கருப்பு இந்த பிரச்சனை பற்றி ஆவேசமாக பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. சபரி அய்யப்பா படத்திற்காக குரல் பதிவு செய்யோம் பொது வாரிசு ரிலீஸ் பிரச்சனை குறித்து கஞ்சா கருப்பு பேசியதாவது “நான் தெரியாம தான் கேக்குறேன்.. இங்க ஒரு படம் ஹிட் அனால் அந்த கதையை தெலுங்குக்கு வேண்டும் என்றால் கொடுக்கத்தான் போகிறோம்.”
“நீங்க ஏன் வாரிசு படத்திற்கு தியேட்டர் இல்லை என சொல்கிறீர்கள். உங்க படம் மட்டும் பாகுபலி தொடங்கி பரதேசிபுலி வரை இங்க வந்திருக்கு. உங்க படம் மட்டும் தமிழ்நாட்டில் ஓடி பெரிய காசு பாக்கலாம். எங்க படம் அங்க ஓட கூடாதா. உங்க படம் வரும்போது ஸ்டே போட்டால் விடுவீங்களா. மரியாதையா வாரிசு படத்தை ஓட்டுங்க, அப்படி ஓட்டுனாதான் பெருமை” என மிகவும் கோபமாக கஞ்சா கருப்பு பேசி இருக்கிறார்.