சினிமா திரையுலகில் திரைப்பட படப்பிடிப்பின்போது பாரபட்சமின்றி அனைவருக்கும் உணவு வழங்கப்படும். இதற்கு காரணம் ஒரு பிரபல நகைச்சுவை நடிகர் என ஸ்வாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது.
திரை உலகில் சினிமா படப்பிடிப்புகளின்போது அனைவருக்கு உணவு வழங்கப்படும். இதற்காக பெரிய பெரிய கேரியரில் சாம்பார், காரகுழம்பு, பொரியல், அவியல் என அனைத்து வகையான உணவும் தினமும் மதிய உணவிற்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது போன்ற நடைமுறைகள் இல்லை. ஆனால் இதை மெயப்ப செட்டியார் தொடங்கி வைத்ததாக கூறப்படுவதுண்டு. அதற்கு பின்னர் அனைத்து சினிமா தயாரிப்பு நிறுவனங்களும் இதை பின்பற்ற ஆரம்பித்துவிட்டன. ஆனால், இதற்கு காரணம் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
நடிகர் நாகேஷ் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் நாகேஷ் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தார். இதற்கு பின்னர் நாகேஷ் என்பவரை தெரியாதவர்கள் இல்லை என்ற நிலைக்கு அவர் வளர்ந்தார்.
முன்பெல்லாம் சினிமாவில் மதிய சாப்பாட்டை நடிகர், நடிகைகள், டெக்னீசியன்கள் வெளியில் சென்றுதான் சாப்பிடுவார்கள். நாகேஷும் வெளியில்தான் சாப்பிடுவார். ஆனால், எத்தனை திறமைகள் இருந்தாலும் நடிகர் நாகேஷ் சிகெரெட் பிடிக்கும் ஒரு பழக்கத்தை மட்டும் விடவில்லையாம். இதனால் ஷூட்டிங்கின்போது மதியம் சாப்பிட்டு முடித்ததம் அந்த கணக்கை மெய்யப்பட்ட செட்டியாரிடம் காட்ட வேண்டும். இதில், சிகெரட் கணக்கை பார்த்த செட்டியார் என்ன இது? என கேட்க மேலாளர் விஷயத்தை தெரிவித்துள்ளார். அவருக்கு தான் சம்பளம் தருகின்றோமே பின்னர் எதற்காக இதையெல்லாம் கம்பெனி கணக்கில் வாங்க வேண்டும். அவரையே வாங்கிக்க சொல் என தெரிவித்துள்ளார்.
இதை நாகேஷிடம் மேலாளர் எடுத்துக் கூறியதை அடுத்து அவர் சரி என தெரிவித்துவிட்டார். அடுத்த நாள் ஷூட்டிங் தொடங்கியதும் அனைவரும் மதிய உணவுக்கு வெளியே சென்றார்கள். நேரம் முடிந்ததும் அனைவரும் வந்த நிலையில் நாகேஷ் வரவில்லை. அவரின் வீட்டுக்கு கால் பண்ணி கேட்ட போது அவர் மனைவி, ’அவர் ஷூட்டிங்கிற்கு காலையிலேயே புறப்பட்டுவிட்டார்’’ என கூறியுளளார்.
அனைத்து இடங்களிலும் அவரை தேடியபோது ஒரு மணி நேரம் கழித்து சிகெரெட் பிடித்தபடி உள்ளே வந்தாராம் நாகேஷ். கடுப்பானவர்கள் எங்கே போனீர்கள் எனக் கேட்க என்னால் சாப்பிடாமல் இருக்க முடியும் சிகரெட் இல்லாமல்இருக்கவே முடியாது. பக்கத்து கடைக்கு போனேன், சிகரெட் இல்லை. கடையை தேடிக்கொண்டே நீண்ட தூரம் சென்றுவிட்டேன் என கூறினாராம். இதனால் மெய்யப்ப செட்டியார் கடுப்பாகி இவர் இப்படி வெளியில் போய் ஆன செலவை விட சிகரெட் செலவு கம்மிதான் என கூறிவிட்டு மேனேஜரிடம் இனி மொத்த படக்குழுவும் இங்கேயே சாப்பிடட்டும் அதற்கான ஏற்பாடுகளை நான் பார்த்துக் கொள்கின்றேன். என்றாராம்.