fbpx

இன்னும் 10 நாட்களில் இறந்துவிடுவேன்..!! 3ஆம் நாளில் உயிர்த்தெழுவேன்..!! பாதிரியாரால் பரபரப்பு

இன்னும் 10 நாட்களில் இறந்துவிடுவேன் என பாதிரியார் ஒருவர் பேனர் வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கண்ணவரம் அருகே கெல்லனப்பள்ளி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் நான் இன்னும் 10 நாட்களில் இறந்து விடுவேன் என்று கூறி வருகிறார். அதோடு இறந்த 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவேன் என்றும் கூறுகிறார். இந்த பாதிரியாரின் பேச்சால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

இன்னும் 10 நாட்களில் இறந்துவிடுவேன்..!! 3ஆம் நாளில் உயிர்த்தெழுவேன்..!! பாதிரியாரால் பரபரப்பு

இந்நிலையில், நான் இன்னும் 10 நாளில் இறந்து விடுவேன் என்று கூறும் பாதிரியார் தனக்கு சொந்தமான இடத்தில் சமாதி தோண்டியதோடு, ஒரு பேனரையும் வைத்துள்ளார். அதில், 10 நாட்களில் இறப்பு, மீண்டும் 3 நாட்களில் உயிர்த்தெழுதல் தொடர்பான வாசகங்கள் அடங்கியுள்ளது. ‌இதனால் பாதிரியாரின் குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருப்பதோடு செய்வதறியாது தவித்து வருகிறார்கள். மேலும், இன்றைய நவீன காலகட்டத்தில் இப்படி கூட மூடநம்பிக்கை நிலவுகிறதா என்று மக்கள் அனைவரும் பரபரப்பாக பேசி‌ கொள்கிறார்கள்.

Chella

Next Post

கனமழைக்கோ, இடியுடன் கூடிய மழைக்கோ வாய்ப்பில்லை... மிதமான மழை நீடிக்கும்…

Tue Nov 22 , 2022
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், நேற்று தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து […]

You May Like