fbpx

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ…

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

  1. முதலில் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில், Tangedco என்று தேடினால் வரும் பக்கத்தை திறந்து கொள்ளவும்.
  2. திறக்கும் முதல் பக்கத்திலேயே, Link your service connection with Aadhar என்று இருக்கும் பகுதியை க்ளிக் செய்து கொள்ளவும்.
  3. அதன் பிறகு திறக்கும் பக்கத்தில், சில தகவல்கள் (information) கொடுக்கப்பட்டிருக்கும். பின்னர் அதே பக்கத்தில், Service Connection Number கேட்கப்படும். அதில் உங்களுடைய மின் இணைப்பு எண் ( E.B. consumer number) பதிவிடவும்.
  4. தொடர்ந்து Enter கொடுக்கும் போது, அடுத்ததாக திறக்கும் பக்கத்தில், பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண் கேட்கப்படும். அதனை உள்ளிடும்போது உங்களுடைய எண்ணிற்கு, OTP அனுப்பப்படும். அதனை உள்ளிடவும் (உங்களுடைய எண் Register செய்யப்படவில்லை எனில் Tangedco -ன் முகப்பு பக்கத்தை மீண்டும் திறந்து, அதில் Billing Service என்ற பகுதியை கிளிக் செய்து அதில் இருக்கும் Mobile Number Registration என்ற பகுதியை ஓபன் செய்து கொள்ளவும்).
  5. இந்த இடத்தில், Owner or Tenant என்ற பகுதி இருக்கும். அதனை நிரப்பவும், தொடர்ந்து Enter கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய எண் ரெஜிஸ்டர் செய்யப்படும்.
  6. OTP உள்ளிட்ட பிறகு, Enter கொடுத்த பின் திறக்கும் பக்கத்தில், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் காட்டப்படும். அங்கு கேட்கும் மற்ற கேள்விகளுக்கு சரியான பதிலை உள்ளிடவும். அங்கு உங்களுடைய ஆதார் எண் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதனை சரியாக நிரப்பிய பின்னர், Declaration கேட்கப்படும்.
  7. அதனை கிளிக் செய்து Submit கொடுத்தால் The details has been uploaded successfully என்று காட்டும். அப்படி காட்டினால் உங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கும்.

Kathir

Next Post

டிசம்பர் 29ஆம் தேதி முதல் Food டெலிவரி சேவை நிறுத்தம்...! அமேசான் நிறுவனம் அறிவிப்பு...!

Sat Nov 26 , 2022
இந்தியாவில் டிசம்பர் 29ஆம் தேதி முதல் அமேசான் நிறுவனம் தனது Food டெலிவரி சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அமேசான் இந்தியாவில் உள்ள தனது உணவக கூட்டாளர்களிடம், மே 2020 இல் தொடங்கிய அதன் உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு, டிசம்பர் 29, 2022 முதல் Amazon Foodஐ நிறுத்த முடிவு செய்துள்ளோம். இந்தத் தேதிக்குப் பிறகு […]

You May Like