கமல்ஹாசனுக்கு காய்ச்சல் மற்றும் சளி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ள நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில், சில நாட்களிலே சண்டை சூடுபிடித்தது. முதல் வாரத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்ட அசீம், இரண்டே வாரத்தில் தனது பக்க ஆதரவை அதிகரித்தார். அவருக்கு போட்டியாக அரசியல் விமர்சகர் விக்ரமனுக்கும் அதிக ஆதரவு இருக்கிறது. பொதுமக்களில் இருந்து வந்த ஷிவின் கணேசன் மற்றும் தனலட்சுமி இருவரும் சிறப்பாக விளையாடி வருவதால் ஆட்டம் சூடுபிடித்துள்ளது. எந்த சீசனிலும் இல்லாமல் கமல் ரசிகர்கள் கேட்க விரும்பியதை வார இறுதியில் கேட்டு விடுகிறார். இதனால் வார இறுதி எபிசோட்டிற்கும் எதிர்பார்ப்புகள் எகிற தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில், கமல்ஹாசனுக்கு காய்ச்சல் மற்றும் சளி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பி இருக்கிறார். அதனால் இந்த வாரயிறுதி எபிசோடுக்கு அவர் வருவாரா என சந்தேகம் கிளம்பி இருக்கிறது. சிலர் மொத்தமாக பிக்பாஸை அவர் விட்டு விலகலாம் எனவும் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. கமல் வரவில்லை என்றால் அவருக்கு பதில் சிம்பு அல்லது ரம்யாகிருஷ்ணனிடம் பேசவும் பிக்பாஸ் குழு தயாராகி வருகிறது. ஆனால், கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிடுவார் எனவும் நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.