fbpx

மெகா நியூஸ்…! மொத்தம் 40,000 காலி பணியிடங்கள்…! இன்று 8 முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வேலை வாய்ப்பு முகாம்…!

சேலம்‌ மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையம்‌ இணைந்து நடத்தும்‌ மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ இன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ இணைந்து நடந்தும்‌ மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ தலைமையில்‌ இன்று சேலம்‌ பத்மவாணி கலைமற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி வளாகத்தில்‌ நடைபெறவுள்ளது.

இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு, மருத்துவம்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட முக்கிய துறைகளில்‌ இருந்து 300-க்கும்‌ மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும்‌ நிறுவனங்கள்‌ 40,000-க்கும்‌ மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத்‌ தேர்வு செய்ய ஊள்ளனர்‌. மேலும்‌, இம்முகாமில்‌ 20,000-க்கும்‌ மேற்பட்ட வேலைநாடுநர்களும்‌ கலந்துகொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 8.00 மணி முதல்‌ மாலை 4.00 மணி வரை நடைபெறவிருக்கும்‌ இம்முகாமில்‌ 8ஆம்‌ வகுப்பு, 10-ஆம்‌ வகுப்பு, 12-ஆம்‌ வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல்‌, செவிலியர்‌, ஆசிரியர்‌, தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும்‌ கலந்துகொண்டு பயன்பெறலாம்‌.

Vignesh

Next Post

கட்சித் தொண்டர்கள் எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்...! அண்ணாமலை திடீர் ட்விட்...!

Sat Nov 26 , 2022
கட்சித் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக மாவட்டம் தோறும் பொது கூட்டங்களை நடத்தி, ஆளும் அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறார். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சிதம்பரத்தில் பாஜகவினரின் சார்பாக பொதுக்கூட்ட நிகழ்ச்சி […]
அடுக்கடுக்கான புகார்கள்..!! ஆப்பு வைக்கும் டெல்லி தலைமை..!! பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கம்..?

You May Like