‘பெண்கள் ஆடை இல்லாமல் அழகாக இருக்கிறார்கள்’ பாபா ராம்தேவின் சர்ச்சை கருத்து!!

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளது தற்போது பெரிய சர்ச்சையாக கிளம்பியுள்ளது. வெள்ளிக்கிழமை தானேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், பெண்களின் ஆடைகள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததோடு, பெண்கள் ஆடை இல்லாமல் அழகாக இருப்பார்கள் என்றார். இந்த நிகழ்வில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸும் கலந்து கொண்டார், இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


தானேயில் நடந்த அந்த நிகழ்ச்சியில், காலையில் யோக முடிந்ததும் பொதுக்கூட்டம் நடக்கவிருந்ததால், யோகாவின் போது யோக ஆடையும், பொது கூட்டம் நடத்தும்போது புடவையும் அணிய, பெண்கள் இரண்டு ஆடைகளையும் கொண்டு வந்தனர், ஆனால் பெண்களுக்கான யோகா பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக பெண்களுக்கான கூட்டம் தொடங்கியதால், பெண்களுக்கு புடவை அணியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கூட்டத்தில் யோகா அடையிலையே அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் “உங்களால் புடவை கட்ட முடியவில்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லை, இப்போது வீட்டிற்கு சென்று புடவை கட்டிக்கொள்ளுங்கள்” என்றார். மேலும், அம்ருதா பட்னாவிஸைப் போல பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், பெண்கள் சல்வார் உடைகளிலும் அழகாக இருக்கிறார்கள், மேலும் என்னுடைய பார்வையில், அவர்கள் எதையும் அணியாமல் கூட அழகாக இருக்கிறார்கள். என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார்.

பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கு பலரும் கண்டித்து வருகின்றனர். மகாராஷ்டிர துணை முதல்வரின் மனைவி முன்னிலையில் பெண்கள் குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்து அநாகரீகமானது, கண்டனத்துக்குரியது. இதனால் அனைத்து பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர், பாபா ராம்தேவின் இந்த கருத்துக்காக, நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

தெறிக்கவிடுகிறது... வடிவேலுவின் குரலில் "பணக்காரன்"பாடல்....

Sat Nov 26 , 2022
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை தந்த சுராஜ் படத்தை இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அப்பத்தா பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோக்ராஃபி செய்திருந்தார். வடிவேலு […]
naai sekar returns vadivelu

You May Like