fbpx

FIFA World Cup Qatar 2022..!! கால்பந்து ஜாம்பவானின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி..!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

உலகக்கோப்பை 2022-க்கான கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில், நேற்று நள்ளிரவில் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அப்போது அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார்.

FIFA World Cup Qatar 2022..!! கால்பந்து ஜாம்பவானின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி..!!

இறுதியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி உலகக்கோப்பை வரலாற்றில் தனது 8-வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா 10 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

Chella

Next Post

’விளையாட்டு வினையாகும்’..!! காதலிக்கு பிறந்தநாள் பரிசாக உயிரைக் கொடுத்த காதலன்..!! சென்னையில் அதிர்ச்சி

Sun Nov 27 , 2022
சென்னை அண்ணாநகர் பகுதியில், தனது காதலியின் பிறந்த நாளில், பரிசு பொருள் கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால், காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் மேற்கு முதல் பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் மோகன் (19). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், ஒருமுறை தனது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் கேக் […]
’விளையாட்டு வினையாகும்’..!! காதலிக்கு பிறந்தநாள் பரிசாக உயிரைக் கொடுத்த காதலன்..!! சென்னையில் அதிர்ச்சி

You May Like