சினிமாவில் ஹீரோக்களின் மாஸ் என்ட்ரிக்கு ஒரு மவுஸ் உள்ளது. கையில் இருந்து வாய்க்கு பூமரை பறக்க விடுவது, கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு ராஜா நடையில் வருவது, வில்லனை சுழட்டி சுழட்டி அடிப்பது என வழக்கமான சினிமாவில் இடம் பெறும் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஹீரோக்கள் எந்த அளவிற்கு மாஸாக காண்பிக்கிறார்களோ அந்த அளவிற்கு சில ஹீரோயின்கள் தங்களின் நடிப்பை வெளிப்படுத்திருக்கின்றனர். அப்படி துணிச்சலாக நெகட்டிவ் ரோலில் நடித்து தங்களை வித்தியாசமான நடிப்பை காண்பித்திருப்பார்கள். அந்த வரிசையில் ரஜினி படத்தில் வில்லியாக நடித்த 5 கதாநாயகிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விஜயசாந்தி
மன்னன் திரைப்படத்தில் விஜயசாந்தி ரஜினியின் மனைவியாக தனது வில்லத்தனமான நடிப்பை திரையில் மிரட்டியிருப்பார். தனது கணவரை எதிர்க்கும் கதாபாத்திரத்தை இயல்பாக எடுத்துச் சென்றது மட்டுமில்லாமல் ஒரு தனித்தன்மைக் கொண்ட பெண்ணாக இத்திரைப்படத்தில் வலம் வந்திருப்பார். 1992இல் வெளியான இப்படத்தில் குஷ்பு, மனோரமா, பண்டரி பாய், கவுண்டமணி, விசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரம்யா கிருஷ்ணன்
90 கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்று படையப்பா. எவர்கிரீன் மூவியாக இன்றும் பார்க்கப்படும் இந்த படம் 1999இல் வெளியானது. படையப்பா திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி மற்றும் நாசர் இணைந்து நடித்துள்ளனர். ரஜினிக்கு நிகரான மாஸில் ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் காண்பிக்கப்பட்டிருப்பார். இன்னும் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் உள்ளனர். வில்லத்தனமான நடிப்பை திரையில் காண்பித்த ரம்யா கிருஷ்ணன் கெரியரில், படையப்பா மிக முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.
ஜோதிகா
தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களின் வரிசையில் சந்திரமுகி முக்கிய இடத்தில் உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நாசர், கேஆர் விஜயா, வடிவேலு போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக ஜோதிகா நடித்திருப்பார். சந்திரமுகியாக தனது பகை உணர்வை வெளிப்படுத்தி காட்டிருப்பார். ஜோதிகா கண்களை உருட்டும் காட்சி இப்போதும் பேசப்படுகிறது.
ஸ்ரீபிரியா
டான் திரைப்படத்தின் ரீமேக் தான் ரஜினி நடித்த பில்லா படம். 1980 ஆம் ஆண்டு வெளியான இப்பட ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ஸ்ரீபிரியா தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை ரொம்ப எதார்த்தமாக அட்டகாசமாக வெளிப்படுத்திருப்பார்.
ஸ்ரீவித்யா
1989 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாப்பிள்ளை. இப்படமானது தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். மாமியார் மருமகனுக்கு இடையே நடக்கும் மோதலை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இப்படத்தில் ரஜினிகாந்த், அமலா, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீவித்யா ரஜினிக்கு வில்லியாக நடித்து மிரட்டிருப்பார்.