பிரபல நடிகரின் மகனை பிக்பாஸ் ஜூலி காதலித்து வருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு சலசலப்பு எழுந்துள்ளது.
பிக்பாஸ் ஜூலி என்றதும் நம் நினைவுக்கு வருவது குறும்படம் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை சீசன்களை கடந்து வந்தாலும் முதல் சீசனில் பார்த்த அந்த குறும்படத்திற்கு ஈடு இணையாகாது. அந்த குறும்படத்தில் வயிறு வலி என்று அழுது ஜூலி ஆர்ப்பாட்டம் செய்ததும், ஓவியா ஜூலியை சமாதானம் படுத்தியதையும், ஜூலி பேச்சை மாற்றி பேசி மாட்டிக்கொண்டதையும் யாராலும் மறக்கவே முடியாத ஒரு குறும்படம்.
இதையடுத்து, பங்கமாக அசிங்கப்பட்டு வெளியேறிய ஜூலிக்கு எங்கு போனாலும், மக்கள் வெறுப்பை காண்பித்தனர். இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி வருவதாகவும், அதே போல ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தன்னால் முடித்த உதவியை செய்ததாகவும் கூறி, தனக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மகன் ஷாரிக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஜூலி மற்றும் ஷாரிக் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்ட நிலையில், இருவரும் ஒன்றாக பல இடங்களில் டேட்டிங் சென்று வருவதாகவும், இருவரும் காதலித்து வருவதாகவும் சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
இருவரும் காதலிப்பதாக வதந்தி ஒருபுறம் பரவி வரும் நேரத்தில், ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாரிக்குடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை போட்டு அதற்கு கேப்ஷனாக, இவன் எனது உண்மையான நண்பன்…எனது ஆன்மாவின் புத்துணர்ச்சி என்று பதிவிட்டு எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி உள்ளார். இதனால், ஷாரிக்கின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் காதல் விவகாரம் உண்மையா? இல்லை இதுவும் வழக்கமாக பரவும் உருட்டா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.