திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. சாமி வீதியுலாவை பக்தர்கள் தினமும் கண்டு மகிழ்கின்றனர். இந்த விழாவின் 10ஆம் நாளான டிசம்பர் 6 திருக்கார்த்திகை தீபம் அன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இதனையொட்டி பொதுமக்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் விளக்கேற்றி கார்த்திகை தீபத்தை கொண்டாடுவர்.
இந்நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது