பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து குயின்ஸி எலிமினேட் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரத்தின் திங்கட்கிழமையன்று பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. அனைத்து போட்டியாளர்களும், இரண்டு நபர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், முகத்தில் க்ரீமை பூசி நாமினேஷனுக்கான காரணத்தையும் சொல்ல வேண்டும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டது. அதற்கு ஏற்றவாரு அனைவரும் விதிகளை பின்பற்றி நாமினேட் செய்தனர். அதன்படி, இந்த வாரத்தில், ரச்சிதா, குயின்ஸி, ஜனனி, மைனா, தனலஷ்மி மற்றும் கதிரவன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.
அப்போதே அனைத்து பிக்பாஸ் ரசிகர்களும், குயின்ஸிதான் எலிமினேட் ஆவார் என்று கணித்தனர். அவர்கள் சொன்னவாரே, குயின்ஸி எலிமினேட் ஆனார் என்ற தகவல் பரவி வருகிறது. கடந்த வாரமே, குயின்ஸிதான் எலிமினேட் ஆகி இருக்க வேண்டும் என்றும் அதற்கு பதில் ராபர்ட் எலிமினேட் ஆகிவிட்டார் என பலரும் அவர்களின் கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். டாஸ்க்குகளில் சரியாக விளையாடாமல் இருந்ததும், இதர வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததும் என இவர் செய்ய தவறிய அனைத்தும் இவருக்கு எதிராகி எலிமினேட் ஆகும் அளவிற்கு இவரை கொண்டு சென்றுள்ளது. சில நெட்டிசன்கள், சாப்பிடுவது தூங்குவது, புறம் பேசுவது ஆகியவற்றை மட்டுமே செய்த குயின்ஸி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தகுதியில்லாத ஒரு போட்டியாளர் என்றும் அவர் பிக்பாஸ் வீட்டில் மிக்சர் சாப்பிட்டு வந்தார் என்றும் அவரை பற்றி பேசி வருகின்றனர்.