இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது. நாம் ஒருவரை தொடர்பு கொள்வதற்கு Call செய்கின்றோம். அதுபோல அந்த Incoming Call Setting-இல் எவ்வளவு Tricks இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில், இன்று இந்த பதிவின் மூலம் Incoming Call Setting -ல் இருக்கும் Tricks பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Tricks 1
* முதலில் உங்களுடைய Call செய்யும் ஆப்ஷன் உள்ளே செல்லுங்கள். அதை மேலே 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் இருக்கும்.
* அதை கிளிக் செய்யுங்கள். அதில், Settings என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் Call All Display While Using Apps என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். அதில் 3 ஆப்ஷன் இருக்கும்.
* அந்த ஆப்ஷன் எதற்கு என்றால், நமக்கு வரும் Call திரையில் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ தோன்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
* அதில் உங்களுக்கு பிடித்த ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்து கொள்ளலாம்.
Tricks 2
* அதேபோல உங்களுடைய Call செய்யும் ஆப்ஷனுக்கு சென்று அதன் மேல் இருக்கும் 3 புள்ளிகள் போன்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
* பின் அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், அதில் Caller Id And Spam Protection என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
* அந்த ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.
* பின் அதன் கீழே Block Spam And Scam Calls என்ற ஆப்சன் இருக்கும். அதை ON செய்ய வேண்டும். இப்படி செய்வதால் அடிக்கடி வரும் Spam calls ஏதும் உங்களுக்கு வராது.
Tricks 3
* உங்களுடைய Call Settings உள்ளே சென்று, அதில் Call Background என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
* அதில் Background என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு படத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
* இப்பொழுது யாரவது உங்களுக்கு Call செய்யும் போது இந்த படம் திரையின் பின்னால் தோன்றும்.