ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கடைபிடித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகை ஆன்லைன் மூலமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் குறித்த கணக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். அப்போது நிறைய பேர் வங்கிக் கணக்கு இல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் சுமார் 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அனைத்து ரேஷன் கடை நிர்வாகிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரேஷன் அட்டை பயனாளிகள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தால் அவர்களை உடனடியாக மத்திய கூட்டுறவு வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டில் வங்கிக் கணக்கை தொடங்க அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கிக் கணக்கு எண், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம் உள்ளிட்டவைகளை ரேஷன் கடை ஊழியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.