fbpx

பல ஆண்களை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து ஏமாற்றிய இளம் பெண் அதிரடி கைது!

சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் நடராஜன்(25). இவர் சாணடோரியம் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் மாவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக தாம்பரம், முடிச்சூர் பிரதான சாலையில் இருக்கின்ற ஒரு இனிப்பகத்திற்கு மாவு பொருட்களை டெலிவரி செய்வதற்காக சென்றபோது அபிநயா (எ) கயல்விழி (23) என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே காதலாக உருவெடுத்தது.

ஆகவே அபிநயா, நடராஜன் உள்ளிட்ட இருவரும் திருமணம் செய்து கொள்வதாக ஒரு கட்டத்தில் முடிவு செய்து இருந்தார்கள். அந்த சமயத்தில் நடராஜனிடம் அபிநயா தனக்கு வயதான நபரை திருமணம் செய்து வைப்பதற்கு தன்னுடைய பெற்றோர்கள் முடிவு செய்ததன் காரணமாக சென்னைக்கு வந்து, இங்கே தனியாக அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வருகிறேன் எனவும், ஆகவே நான் என்னுடைய பெற்றோர்களிடம் பேசுவதில்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் இருக்கின்ற பெருமாள் ஆலயத்தில் நடராஜன் தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களின் சாமதத்துடன் தன்னுடைய காதலியான அபிநயாவை கரம் பிடித்தார். திருமணத்திற்கு பின்னர் அபிநயா வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில் தான் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வீட்டில் இருந்த அபிநயா திடீரென்று காணாமல் போனார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டுப் புடவைகள், 17 சவரன் தங்க நகைகள், 20,000 ரூபாய் பணம் உள்ளிட்டவைகள் காணாமல் போனது நடராஜனின் குடும்பத்திற்கு தெரியவந்தது. அத்துடன் அவருடைய கைபேசி எண்ணை அழைத்தபோதும் கைபேசி அனைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. பல பகுதிகளில் தேடிப் பார்த்தும் அபிநயா கிடைக்காத காரணத்தால், நடராஜனின் குடும்பத்தினர் சற்றே பயந்துள்ளனர்.

மேலும் நடராஜனின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், செம்மஞ்சேரி அருகே இருக்கின்ற தனியார் பெண்கள் விடுதியில் அபிநயா தங்கி இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

உடனடியாக காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு சென்று அபிநயாவை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அதாவது அபிநயா கடந்த 2011 ஆம் வருடம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சார்ந்த விஜய் என்ற இளைஞரை முதலில் மணந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், விஜயுடன் 1 மாத காலம் மட்டுமே வாழ்ந்து விட்டு அதன் பிறகு விவாகரத்து வாங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின் சென்ற 2013 ஆம் வருடம் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த செந்தில்குமார்(33) என்பவரை 2வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

மதுரையில் பிரபல தனியார் துணிக்கடையில் பணியாற்றியபோது உதயா என்ற நபருடன் பழக்கம் உண்டாகி திடீரென்று காணாமல் போனார். அதன் பின்னர் கடந்த 2020 ஆம் வருடம் மறுபடியும் அபிநயா காணாமல் போய் உள்ளார்.

அந்த சமயத்தில் கேளம்பாக்கம் பகுதியில் இருக்கின்ற தனியார் பெண்கள் விடுதியில் தங்கி ஒரு கைபேசி கடையில் பணியாற்றியபோது ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வம் என்ற நபருடன் பழக்கம் உண்டாகி, அவரை திருமணம் செய்து 10 நாட்கள் மட்டுமே அவருடன் வாழ்க்கை நடத்தி விட்டு திடீரென்று காணாமல் போனார். நடராஜனை 4வதாக திருமணம் செய்து நகை மற்றும் பணத்துடன் தற்போது மாயமாகி இருக்கின்றார்.

நடராஜன் வீட்டில் கைப்பற்றிய நகைகளை விற்றுவிட்டு அமீன் என்பவருக்கு கைபேசி, கடிகாரம் என்று பல்வேறு பொருட்களை வாங்கி கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு ஆமீன் பணி நிமித்தமாக அரபு நாடுகளுக்கு சென்று விட்டபடியால், மறுபடியும் 2வது கணவரான செந்தில்குமாருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். அதன் பிறகு அங்கிருந்து மறுபடியும் கேளம்பாக்கம் பகுதியில் ஏற்கனவே தங்கியிருந்த தனியார் பெண்கள் விடுதிக்கு வருகை தந்தபோது காவல்துறையினர் கையும், களவுமாக அபிநயாவை பிடித்திருக்கிறார்கள்.

Kathir

Next Post

புது பைக்கை ஓட்டி பாக்க கேட்டும் கொடுக்காத நண்பன்..! காண்டான நண்பன் இரவு 1 மணிக்கு செய்த செயல்!!!

Sat Dec 3 , 2022
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அடிபள்ளத்தெருவை சார்ந்தவர் உவைஸ் அகமது(19). இவர் படிப்பை முடித்து வேலை தேடி வருகின்றார். மேலும் கேடிஎம் 390 என்ற விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளதாக தெரிகிறது. 3 லட்சம் மதிப்புள்ள இந்த இருசக்கர வாகனத்தை வாங்கிய அந்த நபர் கிராமத்தில் பந்தாவுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இதை சென்ற வியாழக்கிழமை அன்று உவைஸின் நண்பரான பக்ருதீன் பார்த்துவிட்டு அந்த இருசக்கர வாகனத்தை […]

You May Like