fbpx

“ஆசைக்கு இணங்கினால் உயர் பதவி” மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி முதல்வர்!!!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வி இயல் கல்லூரி சென்ற 1920 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆசிய கண்டத்திலேயே உடற் கல்விக்கான முதல் கல்லூரி இதுதான் என்று சொல்லப்படுகிறது. இந்த கல்லூரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் அதிகமானோர் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி வளாகத்திலேயே தங்கும் விடுதியும் இருக்கிறது.

இந்த கல்லூரியின் முதல்வராக இருக்கின்ற ஜார்ஜ் ஆபிரகாம் மீது முதுநிலை படிப்பு படிக்கும் ஒரு மாணவி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில், கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீரலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையின் தரப்பில் தெரிவித்ததாவது, உடற்கல்வி கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் முதுநிலை மாணவிக்கு உதவி செய்வதை போல உரையாடி, அந்த மாணவியின் கைப்பேசி எண்ணை கல்லூரியின் முதல்வர் வாங்கியிருக்கின்றார்.

அதன் பிறகு அந்த மாணவிக்கு whatsapp-ல் குறுஞ்செய்தியும் அனுப்பி இருக்கின்றார். அந்த குறுஞ்செய்திகள் விளையாட்டு பயிற்சி உயர் வாய்ப்பு குறித்து உதவி செய்ததாக தெரிவித்து தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அந்த மாணவியை அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு, பல ஆபாச குறுஞ்செய்திகளையும் கல்லூரி முதல்வர் அந்த மாணவிக்கு அனுப்பி இருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன கல்லூரி மாணவி, அந்த கல்லூரி முதல்வர் சார்ஜ் ஆபிரகாம் மீது புகார் வழங்கியிருக்கிறார். அதனடிப்படையில் நாங்கள் விசாரணை செய்தோம். முதல் கட்ட விசாரணையில் மாணவியின் கைபேசியை ஆய்வு செய்திருக்கிறோம். அதில் மாணவியிடம் அந்த கல்லூரி முதல்வர் அத்துமீறி நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதால், முதல் கட்டமாக கல்லூரி முதல்வர் ஆப்ரகாம் மீது பாலியல் துன்புறுத்தல் (354ஏ) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.

சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையாளர் கிரிஸ்டின் ஜெயஸ்ரீ அந்த கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை செய்தார். இதனையடுத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

கோவிலில் திருடும் முன் சாமி கும்பிட்டுவிட்டு திருடிச்சென்ற திருடன்..!! வைரலாகும் வீடியோ

Sun Dec 4 , 2022
மத்தியப்பிரதேசத்தில் கோவிலில் திருட சென்ற திருடன் ஒருவன், திருடுவதற்கு முன்பு கடவுளை வணங்கிவிட்டு பின் திருட்டில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் பனிஹர் கிராமத்தில் உள்ள ஜெயின் கோவிலில் திருடன் ஒருவன் பயபக்தியுடன் உள்ளே நுழைந்து அங்குள்ள சாமி சிலைகளை வணங்கியுள்ளார். அதன் பிறகு, கோவிலில் இருந்த 6 உலோக சிலைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் கொண்ட உண்டியல் உள்ளிட்டவற்றை திருடிச் […]
கோவிலில் திருடும் முன் சாமி கும்பிட்டுவிட்டு திருடிச்சென்ற திருடன்..!! வைரலாகும் வீடியோ

You May Like