திருமணத்தில் மயங்கி விழுந்த மணப்பெண் பரிதாப உயிரிழப்பு..!

உத்திரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள மஹிலாபாத் பாத்வனா என்ற கிராமத்தில் ராஜ்ப்பால் சர்மா என்பவர் தனது மகள் ஷிவாங்கி சர்மாவுடன் (21) வசித்து வருகிறார். சர்மாவுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தனர். திருமணத்தன்று புகைப்படம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த தருணத்தில் போது திடீரென ஷிவாங்கி சர்மா மேடையில் மயக்கம் வந்து விழுந்துள்ளார்.


இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலே மணப்பெண்ணுக்கு இறுதி சடங்கினை செய்துள்ளனர். ஆனால் இது பற்றி தகவல அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து மணப்பெண்ணின் உறவினர்கள் பேசும்போது, ஷிவாங்கி சர்மாவிற்கு சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தார். அதன்பிறகு உடல்நிலை குணமான நிலையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற போது மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறியிருக்கின்றனர்.

1newsnationuser5

Next Post

#கிருஷ்ணகிரி:பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை மர்ம மரணம்..!

Wed Dec 7 , 2022
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள ஒன்னக்கரை எனும் கிராமத்தில் கூலி தொழிலாளியான சகாதேவன் என்பவர் தனது மனைவி லாவண்யாவுடன் வசித்து வருகிறார்.  இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.  இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லாவன்யாவுக்கு கடந்த 13 நாட்களுக்கு முன்னரே மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.  சம்பவம் நடைபெற்ற நாளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது. இது பற்றி தகவலின் பேரில் போலீசார் […]
n4492048201670388564957aab314f796fe569100b7833a1b1231d30598446bca4d627c2c3295d1e85384ad

You May Like