இமாச்சல் பிரதேசத்தில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது, 68 தொகுதிகளில் 40 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஹிமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் -40 , பாஜக-25 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/suresh-kumar.jpg)
இந்நிலையில் இமாச்சலில் ஹமிர்பூர் மாவட்டம் போரஞ்ச் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் குமார் மொத்தம் 24,779 வாக்குகளை பெற்றிருந்தார், அதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அனில் திமான் 247,19 வாக்குகள் மட்டுமே பெற்றார், அதன்படி வெறும் 60 ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அனில் திமனை தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் குமார். மேலும் இந்த தொகுதியில் நோட்டா-க்கு 293 பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், குமர்வின் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரந்திர் சர்மா, 171 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அனைத்து தொகுதிகளிலும் ‘நோட்டா’வுக்கு 250 ஓட்டுகளுக்கு மேல் விழுந்தது. இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை, டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.