கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் காலிறுதி போட்டிகள் இன்று தொடங்க உள்ளன.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்றுகளும், நாக்-அவுட் சுற்றுகளும் நடந்து முடிந்துள்ளன. 16 அணிகள் களமிறங்கிய நாக்-அவுட் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று, பிரேசில், குரோஷியா, நெதர்லாந்து, அர்ஜென்டினா, மொராக்கோ, போர்ச்சுக்கல், இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று காலிறுதி சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் உலகின் நம்பர் ஒன் அணியான பிரேசிலுடன், குரோஷியா அணி மோதுகிறது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அணி, மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது. முக்கிய அணிகள் மோதிக்கொள்வதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.