வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் டையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் உங்களது வாக்காளர் பட்டியை இணைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி…?
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து Voter Helpline செயலியைப் பதிவிறக்கவும். பின்னர் பயன்பாட்டைத் திறந்து, ‘Agree’ என்ற விருப்பத்தை கிளிக் செய்து, ‘Next’ என்பதை தேர்வு செய்யவும். அடுத்து முதல் விருப்பமான ‘வாக்காளர் பதிவு’ என்பதைத் கிளிக் செய்யவும்.
பின்னர் தேர்தல் அங்கீகாரப் படிவத்தை (படிவம் 6B) கிளிக் செய்து திறக்கவும். அடுத்து ‘Lets Start’ என்பதை தேர்வு செய்யவும். இப்போது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட உங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணை உள்ளிட்டு Send OTP என்பதைத் தேர்வு செய்யவும். அடுத்ததாக நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிட்டு ‘Verify’ என்பதைக் கிளிக் செய்யவும்.
அடுத்ததாக Yes I Have Voter ID என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ‘Next’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிட்டு, உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ‘Fetch details’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ‘Proceed’ என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்னர் ஆதார் எண், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் உங்கள் அங்கீகார இடத்தை நிரப்பி, ‘Finish’ என்பதைக் கிளிக் செய்யவும். இறுதியாக படிவம் 6B மாதிரிக்காட்சி பக்கம் திறக்கும். உங்கள் விவரங்களை மீண்டும் சரிபார்த்து, உங்கள் படிவத்தை சமர்ப்பிக்கலாம்.