fbpx

தந்தையானார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால்..!! குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா..?

இந்திய அணி வீரர் மயங்க் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால். இவர் தொடக்க ஆட்டக்காரர் என்ற பெயர் பெற்றவர். இவர் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவர், பெங்களுருவில் பிசப் காட்டன் ஆண்கள் பள்ளியிலும், ஜெயின் பல்கலைக் கழகத்திலும் பயின்ற மாணவர் ஆவார். இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

தந்தையானார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால்..!! குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா..?

இந்நிலையில், இந்திய அணி வீரர் மயங்க் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை மயங்க், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’அயன்ஷ்’-ஐ எங்கள் இதயம் நிறைந்த அன்புடன் அறிமுகப்படுத்துகிறோம் என்றும் அயன்ஷ் கடவுள் கொடுத்த வரம் என்றும் மயங்க் அகர்வால் பதிவிட்டுள்ளார். விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

அசத்தல்...! இழப்பீட்டு தொகை ரூ.12,500 லிருந்து ரூ.50,000-மாக உயர்வு...! மத்திய அரசு தகவல்...!

Mon Dec 12 , 2022
விபத்துக்களில் காயடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.12,500 லிருந்து ரூ.50,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் காப்பீடு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் உள்ள நிலையில், ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து, திட்ட நிறைவு சான்றிதழ் வழங்கும்வரை ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை சரிகட்ட காப்பீடுகள் அவசியமாகிறது. பணிகள், தாவரங்கள், எந்திரங்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் உபகரணங்கள், ஆவணக்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் இயலாமைக்கான காப்பீடு. நபர்களின் காயம் மற்றும் சொத்துக்கள் சேதத்திற்கான காப்பீடு. இதற்கிடையே, […]

You May Like