fbpx

விடிந்தால் திருமணம்..!! இரவில் மணமகனுடன் பேசிய அந்த உரையாடல்..!! திடீரென தூக்கில் தொங்கிய மணப்பெண்..!!

தெலங்கானாவில் திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டை மாவட்டம் நவிபேட் நகரை சேர்ந்தவர் ரவளி. எம்சிஏ படித்த ரவளிக்கும் மென் பொறியாளராக பணியாற்றும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில், ரவளி வருங்கால கணவன் சந்தோஷ் உடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின் அதிகாலை 4 மணி அளவில் திருமண மண்டபத்தில் உள்ள அறை ஒன்றுக்கு சென்ற ரவளி திருமணத்தன்று அணிந்து கொள்வதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பட்டுப்புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விடிந்தால் திருமணம்..!! இரவில் மணமகனுடன் பேசிய அந்த உரையாடல்..!! திடீரென தூக்கில் தொங்கிய மணப்பெண்..!!

இந்நிலையில், ரவளியை காணாமல் தேடிய உறவினர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த நவிபேட் போலீசார், விரைந்து சென்று ரவளி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தபின் மணமகன் சந்தோஷ் தொலைபேசியில் ரவளியை கொடுமை செய்ததாக ரவளியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சந்தோசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடிந்தால் திருமணம்..!! இரவில் மணமகனுடன் பேசிய அந்த உரையாடல்..!! திடீரென தூக்கில் தொங்கிய மணப்பெண்..!!

தொலைபேசியில் பேசும் போது திருமணத்திற்கு பின் நீ வேலைக்கு போக வேண்டும், உங்கள் குடும்ப சொத்தில் உனக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சந்தோஷ் கூறியதாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனை அடைந்த ரவளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Chella

Next Post

’என்ன கல்யாணம் பண்ணிக்கோ’..!! வற்புறுத்திய காதலியை கொன்று வாய்காலில் வீசிய காதலன்..!! பரபர சம்பவம்

Mon Dec 12 , 2022
திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை தனியாக அழைத்துச் சென்று துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா 26). இவர், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக அங்குள்ள மாவட்ட மைய நூலகத்தில் படிப்பதற்காக தினமும் தனியார் பஸ்சில் வந்து சென்றுள்ளார். கடந்த 6ஆம் தேதி முதல் அகல்யாவை காணவில்லை என்பதால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், […]

You May Like