fbpx

சாரதா மடத்தின் தலைவர் பிரவ்ராஜிகா காலமானார்..!! பிரதமர் மோடி இரங்கல்..!!

சாரதா மடத்தின் தலைவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா காலமானார். அவருக்கு வயது 102.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆன்மீக அமைப்பு சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷன். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா. 102 வயதான பிரவ்ராஜிகாவுக்கு கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சனிக்கிழமை அவருடைய உடல் நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சாரதா மடத்தின் தலைவர் பிரவ்ராஜிகா காலமானார்..!! பிரதமர் மோடி இரங்கல்..!!

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரவ்ராஜிகா பக்திபிரணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரே மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை..!! புதிய அரசாணை வெளியீடு..!!

Tue Dec 13 , 2022
அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 2 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதை தடுக்கும் வகையில் உலக நாடுகள் கடும் விதிமுறைகளை செயல்படுத்த வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது. 1990களிலேயே உலகம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை குடித்து தற்கொலை செய்துகொள்வோரின் […]
தமிழ்நாட்டில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை..!! புதிய அரசாணை வெளியீடு..!!

You May Like