fbpx

19 வருடமாக அமைச்சர் கீதா ஜீவன் மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கு!!! நீதிபதி அதிரடி தீர்ப்பு…

தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ2.31 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது, அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவனும் இவ் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.பெரியசாமி மீது முதன்மை குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 2-வது என்.பெரியசாமி மனைவி எபினேசர், 3-வது மகன் ராஜா, 4-வதாக தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், 5-வதாக அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், 6-வதாக கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்த சொத்துகுவிப்புவழக்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கில் கீதாஜீவனின் தந்தை உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுவது நிரூபிக்கப்படவில்லை என கூறி 5 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார். நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்த அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் “நீதி கிடைத்துள்ளதாகவும், நியாயம் வென்றுள்ளதாகவும்” தெரிவித்தார்.

Kathir

Next Post

ஊசி மூலம் கர்ப்பம் அடைந்த சிறுமி!!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்....

Thu Dec 15 , 2022
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பம் தரித்தது குறித்து அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். 19 வயதில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், விந்தணுவை உட்செலுத்த ஊசியைப் பயன்படுத்தி கர்ப்பமானதாகவும் சிறுமி கூறுகிறார். மான்செஸ்டரைச் சேர்ந்த ஷானன் நசரோவிச்-க்கு 23 வயதாகும் இவருக்கு தற்போது பெண் குழந்தை உள்ளது. இவர் “TIK TOK” செயலியில் தாயாக இருந்த அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். இந்த விஷயம் தான் தற்போது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. ஷானன் […]

You May Like