fbpx

சூப்பரோ சூப்பர்..!! ’இனி எங்கும் அலையத் தேவையில்லை’..!! விண்ணப்பித்த சில மணி நேரங்களில் ரேஷன் கார்டு..!!

ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமக்களின் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த அடையாள ஆவணம் இல்லாவிட்டால் மலிவு விலையில் உங்களால் பொருட்களை வாங்க முடியாது. இதுவரை ரேஷன் கார்டு பெறுவது அவ்வளவு சுலபமானதாக இருந்ததில்லை. இதற்காக பல இடங்களுக்கு பல மணி நேரங்கள் செலவு செய்து அலைந்து திரிய வேண்டும். ஆனால், இப்பொழுது ரேஷன் கார்டு பெரும் செயல்முறை எளிதாகியுள்ளது.

சூப்பரோ சூப்பர்..!! ’இனி எங்கும் அலையத் தேவையில்லை’..!! விண்ணப்பித்த சில மணி நேரங்களில் ரேஷன் கார்டு..!!

மக்களின் நலனை கருத்தில்கொண்டு உத்தரகாண்ட் அரசு ரேஷன் கார்டு பெறும் செயல்முறையை ஆன்லைன் மூலம் எளிதாக்கியுள்ளது. இனிமேல் நீங்கள் இதற்காக மாவட்ட வழங்கல் அலுவலகம் செல்லவோ அல்லது புரோக்கர்களிடமோ அல்லது ஏதேனும் அதிகரிகளிடமோ பணத்தை கொடுத்து ஏமாற வேண்டியதில்லை. ஒரே நாளில் உங்களுக்கு ரேஷன் கார்டு தயாராகிவிடும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

சூப்பரோ சூப்பர்..!! ’இனி எங்கும் அலையத் தேவையில்லை’..!! விண்ணப்பித்த சில மணி நேரங்களில் ரேஷன் கார்டு..!!

விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் சில மணி நேரங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு, பிறகு உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். நீங்கள் வழங்கிய ஆவணங்களில் அல்லது விண்ணப்பத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அது சரிசெய்யப்பட்டு மறுநாளுக்குள் உங்களுக்கு ரேஷன் கார்டு செய்து தரப்படும். ரேஷன் கார்டு உங்கள் கைக்கு கிடைத்த குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு தான் உங்களால் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

#இராமநாதபுரம் : பாம்பு கொத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மூன்றாம் வகுப்பு மாணவன்..!

Thu Dec 15 , 2022
இராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள தர்மபுரத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தர்மபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பிள்ளைகள் இங்கு தான் பயின்று வருகின்றனர்.  கிட்டத்தட்ட 200க்கும் மேல் மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று திடீரென பாம்பு ஒன்று வகுப்பறைக்குள் நுழைந்துள்ளது. இதனையடுத்து பாடம் கவனித்துக் கொண்டிருந்த பிரியதர்ஷன் என்ற மூன்றாம் […]

You May Like