fbpx

பிக்பாஸ் வரலாற்றை மாற்றப் போகும் அந்த போட்டியாளர்..!! கன்ஃபார்ம் டைட்டில் இவருக்குதான்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவராத போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியேறிவிட்டனர். அதில் சில எதிர்பாராத எலிமினேஷன் நடைபெற்றிருந்தாலும் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் கடுமையான போட்டியாளர்களாக இருக்கின்றனர். அந்த வகையில், இந்த பிக்பாஸ் டைட்டிலை தட்டி செல்லக்கூடிய தகுதி விக்ரமன், அசீம் உள்ளிட்ட வெகு சிலருக்கு மட்டுமே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வரலாற்றை மாற்றப் போகும் அந்த போட்டியாளர்..!! கன்ஃபார்ம் டைட்டில் இவருக்குதான்..!!

இந்நிலையில், இந்த சீசனின் வெற்றியாளர் இவர்தான் என்று கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆயிஷா கூறியிருக்கிறார். தற்போது சோஷியல் மீடியா சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் ஆயிஷா, இந்த பிக்பாஸ் டைட்டிலை ஷிவின் தான் நிச்சயம் கைப்பற்றுவார் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிலேயே ஷிவின் தன்னுடைய விளையாட்டை மிகவும் நேர்த்தியாகவும் கவனமாகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார். மற்றவர்களை ஏறி மிதித்து தன்னுடைய விளையாட்டை அவர் விளையாடியதில்லை. தன்னுடைய கருத்தை நேர்த்தியாகவும் கவனமாகவும் முன்வைப்பார் என்றும் ஆயிஷா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வரலாற்றை மாற்றப் போகும் அந்த போட்டியாளர்..!! கன்ஃபார்ம் டைட்டில் இவருக்குதான்..!!

ஒருவகையில் அவர் கூறியது முற்றிலும் உண்மையே. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் ஷிவின் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் பப்ளிசிட்டிக்காக ஒருபோதும் அவர் யாரிடமும் தேவையில்லாமல் சண்டை போட்டது கிடையாது. ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காகவே தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட சிலர் தேவையில்லாமல் சண்டை போட்டு ஆண்டவரிடம் திட்டும் வாங்கி இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது ஷிவின் மட்டும் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய விளையாட்டை நேர்மையாக விளையாடி கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்த பிக்பாஸ் டைட்டிலை தட்டிச்செல்லும் அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கிறது. அப்படி ஒன்று நிகழ்ந்து விட்டால் பிக்பாஸ் வரலாற்றிலேயே இது தரமான சம்பவமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Chella

Next Post

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்..!! ரூம் எடுத்து தூக்கில் தொங்கிய அதிர்ச்சி சம்பவம்..!!

Thu Dec 15 , 2022
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த மென்பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் சிங்காநல்லூர் உப்பிலி பாளையம் அருகே ஆர்.வி.எல்நகரை சேர்ந்தவர் சங்கர் (29). இவர், சென்னையில் என்ஜினீயராக வேலை செய்து வந்த நிலையில், கடந்த வாரம் தனது வேலையை ரிசைன் செய்துவிட்டு கோவை திரும்பியுள்ளார். சங்கருக்கு பல மாதங்களாக ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில், […]

You May Like