கடந்த வியாழனன்று, 12232 என்று ரயிலில் சண்டிகரில் இருந்து ஷாஜஹான்பூருக்குப் சிவம் பட் என்பவர் பயணித்தார் அப்போது ரயிலை ஒருவர் ஏறி 15 ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலை 20 ரூபாய்க்கு தினேஷ் என்ற நபர் விற்று இருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ரயில் 12232 இல் ஒரு பேண்ட்ரி கார் அல்லது மேலாளர் இல்லை என்று விற்பனையாளர் தொடர்ந்து கூறினார். எனவே, யார் வேண்டுமானாலும் ரயிலில் ஏறி ரயில் நீரை எந்த விலைக்கு விற்கலாமா” என்று சிவம் பட் பதிவிட்டிருந்தார்.
சிவம் அளித்த புகாரைத் தொடர்ந்து, தினேஷின் மேலாளர் ரவிக்குமார், ரயில்வே சட்டத்தின் 144 (1) பிரிவின் கீழ் லக்னோவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அபராதம் விதிக்குமாறு கோட்ட ரயில்வே மேலாளர் மந்தீப் சிங் பாட்டியாவுக்கு வணிகக் கிளை பரிந்துரை செய்தது.
அதை தொடர்ந்து பேக் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலுக்கு எம்ஆர்பியை விட ரூ.5 அதிகமாக வசூலித்த இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனின் (IRCTC) ரயில் எண் 12231/ க்கு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மிஸ்ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாக இந்திய ரயில்வேயின் அம்பாலா பிரிவு நேற்று அறிவித்தது.
அனுமதி பெற்று உரிம ஆவணங்களை சரிபார்த்த பிறகு, ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இது குறித்து ஐஆர்சிடிசி ஆர்எம்-க்கு தெரிவிக்கப்பட்டதாகவும் டிஆர்எம் பாட்டியா தெரிவித்தார். மேலும், ரயில் ஓரங்களில் விற்பனை மற்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் புகார்களை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.