fbpx

தங்கத்தில் தோசை, சாக்லேட் பார், பிளம் கேக்!!! உலக சாதனை படைத்த திருநெல்வேலி ஹோட்டல்…

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள மூன்று நட்சத்திர விடுதியுடன் கூடிய உணவகத்தில் நெல்லையின் பிரபல பேக்கரி நிறுவனமான ஆர்யாஸ் நிறுவனத்தின் முப்பெரும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் 100 மில்லி கிராம் எடை கொண்ட தங்கத்தாள் கொண்டு நான்கு அடி நீளத்தில் உலக அளவில் அதிக விலை கொண்ட தங்க தோசை தயாரிக்கப்பட்டு ரூ.20,230 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டது.

அதேபோல் 250 மில்லி கிராம் தங்கத்தாள் கொண்டு 5 கிலோ எடையுடைய உலக அளவில் மிகப்பெரிய அளவிலான சாக்லேட் பார் தயாரிக்கப்பட்டு அதற்கு விலையாக ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. 400 மில்லி கிராம் தங்கத்தாள் கொண்டு உலக அளவில் மிகப்பெரிய அளவிலான ரிச் பிளம் கேக் தயாரிக்கப்பட்டு அதற்கு ரூ.2.60 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

தயாரிக்கப்பட்ட பொருட்களை பிரம்மாண்ட கண்ணாடி பேழையில் காட்சிப்படுத்தினர். மேலும் இதனை அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் சார்பில் வந்த அதிகாரிகள் ஆய்வு செய்து உலக சாதனையை அங்கிகரித்து அந்த முயற்சிக்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினை ஆர்யாஸ் நிறுவன உரிமையாளரிடம் வழங்கினர். சுமார் 13 மணி நேர முயற்சியில் இந்த உலக சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்கத்தினாளான தோசையை தயாரித்து காட்சிப்படுத்தி உலக சாதனை மேற்கொண்ட சில நிமிடங்களிலேயே அது வாடிக்கையாளர் மூலம் விற்பனை ஆனது. மீதமுள்ள தங்கத்தினால் தயார் செய்யப்பட்ட சாக்லேட் பார் மற்றும் ரிச் பிளம் கேக் ஆகியவை நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள எங்கள் நிறுவனத்தில் இரண்டு நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் இரண்டு நாட்களுக்கு பின்னர் கிறிஸ்மஸ் தினத்தன்று ஆதரவற்ற ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் கூறியுள்ளார்.

Kathir

Next Post

இரவு உறக்கத்தின் இடையே சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்.. இது உங்களுக்கு தான்..!

Wed Dec 21 , 2022
சிலருக்கு இரவில் சிறு நீர் கழித்த பின்னர் மயக்க நிலை ஏற்படுகிறது. (Post MICTURITIONAL syncope) இதனை எவ்வாறு தவிர்ப்பது எப்படி என்று டாக்டர் பரூக் அப்துல்லா எனபவர் அறிவுரை வழங்கியுள்ளார். இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நமது சிறுநீர்ப்பை நிரம்பி சிறுநீர் கழிக்க தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இதனால் தூக்கம் களைந்து விடாமல் இருக்க வேண்டும் என்று திடீரென எழுந்து பாத்ரூமை நோக்கி வேகமாக நடந்து சென்று சிறுநீர் கழிக்கும் […]

You May Like