fbpx

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்…! மத்திய அரசு அதிரடி உத்தரவு…!

நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவும் வசதிகளை ஏற்படுத்தவும் மாணவர்களுக்குத் தூய்மைக் குறித்த கல்வியைக் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அரசுப் பள்ளியில் பெற்றோர்கள் கண்முன்னே மாணவிகள் செய்த சம்பவம்..! சலசலப்பு... பரபரப்பு..!

இது குறித்து பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை, கல்வி அமைச்சகம், நீர்வள அமைச்சகம், நிதி ஆயோக், கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறைகள், முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் அரசு பள்ளிகளில் தூய்மை வசதிகளை மேம்படுத்துதல், பாதுகாப்பான குடிநீரை வழங்குதல் மற்றும் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளைப் பராமரித்தல், உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகளை மறுசீரமைத்தல், ஆகியவற்றுக்கு அரசு நீண்டகாலமாக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், நமது குழந்தைகளின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை உறுதி செய்ய பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பான குழாய் மூலம் குடிநீர், வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Vignesh

Next Post

தீவிரமடையும் கொரோனா..!! பள்ளி-கல்லூரிகள், திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம்..!! முதலமைச்சர் அதிரடி உத்தரவு..!!

Mon Dec 26 , 2022
பள்ளி, கல்லூரி, திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட உள் அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அதில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட‌ சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா […]

You May Like