fbpx

நடிகர் பிரபாஸ்-க்கு இப்படி ஒரு நிலைமையா..? சொத்தை அடமானம் வைத்து ரூ.21 கோடி கடன்..!! திரையுலகில் சலசலப்பு..!!

நடிகர் பிரபாஸ் ரூ.21 கோடி கடனுக்கான காசோலையை வங்கியிலிருந்து பெற்றிருக்கிறார். இந்த செய்தி தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் தான் நடிகர் பிரபாஸ். இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திருந்தார். இதையடுத்து, அவருக்கு பல பட வாய்ப்புகள் அடுக்கடுக்காக குவிந்தது. மிகவும் பிஸியான நட்சத்திரமாக மாறிவிட்டார். இவர், தனது ஒரு படத்திற்கே சுமார் ரூ.150 கோடிக்கும் மேலாக சம்பளம் வாங்கி வருகிறார். நடப்பாண்டின் படி இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் $27 மில்லியன் ஆகும். இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தனது சொத்தை பிணையமாக வைத்து வங்கியிலிருந்து சுமார் ரூ.21 கோடி கடன் தொகையை பெற்றிருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பிரபாஸ்-க்கு இப்படி ஒரு நிலைமையா..? சொத்தை அடமானம் வைத்து ரூ.21 கோடி கடன்..!! திரையுலகில் சலசலப்பு..!!

மிகப்பெரும் பொருட்செலவில் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் கோபிகிருஷ்ணா மூவிஸ் பேனர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. அதேபோல ப்ரண்ட்ஸ் பேனர்ஸ் நிறுவனத்தின் கீழ் வெளியிடப்பட்ட ‘சாஹோ’ படமும் பெரும் தோல்வியை தழுவியது. பாகுபாலி மூலம் வெற்றிநாயகனாக ஜொலித்த இவருக்கு இந்த இரண்டு படங்களும் தோல்வியை கொடுத்தது. இரண்டு படங்களுமே தோல்வியை தழுவியதால் நடிகர் பிரபாஸ் தனது சம்பளத்தின் பெரும்பகுதியை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகர் பிரபாஸ்-க்கு இப்படி ஒரு நிலைமையா..? சொத்தை அடமானம் வைத்து ரூ.21 கோடி கடன்..!! திரையுலகில் சலசலப்பு..!!

கடந்த வாரம் புதன்கிழமையன்று பிரபாஸ் ரூ.21 கோடி கடனுக்கான காசோலையை வங்கியிலிருந்து பெற்றிருக்கிறார். இந்த செய்தி தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரு படத்திற்கே ரூ.150 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கிய பிரபாஸ் எந்த காரணத்தினால் இப்போது ரூ.21 கோடி கடனை பெறுகிறார் என்று பலரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பிரபாஸ் ஒரு சாதாரண ஆள் இல்லை, தெலுங்கு திரையுலகில் அவர் ஒரு மிகப்பெரிய நடிகர். அப்படி இருக்கையில் அவர் ஏன் கடன் வாங்கியுள்ளார் என பலரும் யோசித்து வருகின்றனர். பிரபாஸ் புதிய தொழிலில் முதலீடு செய்வதற்காக தான் வங்கியிலிருந்து கடன் தொகையை பெற்றிருக்கிறார் என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர்.

Chella

Next Post

40 கோடி ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் கசிவு.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

Mon Dec 26 , 2022
40 கோடிக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் தகவல்களை ஹேக்கர் ஒருவர் சொந்தமாக வைத்திருப்பதாகக் கூறி அதை இணையதளத்தில் விற்பனை செய்து வருகிறார். மேலும் உயர்மட்ட மற்றும் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் தகவல்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் சைபர் கிரைம் உளவுத்துறையின் இணை நிறுவனர் அலோன் கால், சுந்தர் பிச்சை மற்றும் சல்மான் கான் ஆகிய இரு முக்கிய நபர்களின் தகவல்களை மாதிரியாக வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் […]
ட்விட்டரிடம் கியூட்டாக வேண்டுகோள் விடுத்த கூகுள் இந்தியா..! வைரலாகும் ட்விட்டர் பதிவு..!

You May Like