fbpx

பனியால் உறைந்த ஆற்றின் மீது நடந்துச் சென்ற 3 இந்தியர்கள் பலி..!! புகைப்பட மோகத்தால் அமெரிக்காவில் பறிபோன உயிர்..!!

அமெரிக்காவில் பனிப்பொழிவால் உறைந்த ஆற்றின் மீது புகைப்படம் எடுப்பதற்காக சென்ற இந்திய தம்பதி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயணா முட்டனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனாவில் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையொட்டி நாராயணா தனது மனைவி மற்றும் 2 மகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். நாராயணாவுடன் சேர்த்து 3 குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அங்கு கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஆறு முழுவதும் பனியால் உறைந்திருந்தது. அப்போது, குழந்தைகளை ஆற்றின் அருகே விட்டுவிட்டு நாராயணா, மனைவி ஹரிதா மற்றொரு இந்தியரான கோகுல் ஆகிய 3 பேரும் உறைந்த ஆற்றின் மேல் நடந்துச் சென்றுள்ளனர்.

பனியால் உறைந்த ஆற்றின் மீது நடந்துச் சென்ற 3 இந்தியர்கள் பலி..!! புகைப்பட மோகத்தால் அமெரிக்காவில் பறிபோன உயிர்..!!

புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 3 பேரும் உறைந்த ஆற்றின் மீது நடந்த போது திடீரென பனியால் உறைந்த ஆற்றில் வெடிப்பு ஏற்பட்டு 3 பேரும் அந்த உறைந்த ஆற்றுக்குள் விழுந்தனர். பின்னர், மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

#அரியலூர் : வேலைக்கு சென்று திரும்பிய பெண்ணை அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை..!

Thu Dec 29 , 2022
அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி. இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த முனியப்பன் என்பவருடன் திருமணம் நடந்தது. ராமகிருஷ்ணன் ராசாத்திக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அன்று முதல் ராசாத்தி தனது சொந்த ஊரான வெங்கனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், கோவில் எசனை கிராமம் […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like