fbpx

காதலியின் வீட்டில் விடிய விடிய தங்கியிருந்த காதலன்..!! கண்டித்த தாயை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சிறுமி..!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனது காதலனோடு சேர்ந்து தாயை சரமாரியாக குத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே மும்ப்ரா அம்ருத் நகர் பாத்திமா ஹைட்ஸ் என்ற கட்டடத்தில் வசித்தவர் ஷபா ஹஸ்மி. ஷபாவுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவரின் கணவர் போதைப்பொருள் வழக்கில் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். டியூசன் நடத்தி அதில் கிடைக்கும் வருமானத்தில் ஷபா தனது குடும்பத்தை நடத்தி வந்தார். இவரின் மூத்த மகளான 17 வயது சிறுமி, புர்ஹான் ஷேக் (22) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால், மைனர் பெண்ணின் காதலுக்கு அவரது தாயார் ஷபா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தாய், மகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. சிறுமியின் காதலை ஏற்கவே முடியாது என்பதில் அவரின் தாயார் உறுதியாக இருந்தார். இந்நிலையில், புர்ஹான் ஷேக் அடிக்கடி சிறுமியின் வீட்டில் தங்குவது வழக்கம். சம்பவத்தன்று இரவும் சிறுமி வீட்டில் புர்ஹான் ஷேக் தங்கியுள்ளார். இதனால் காலையில் தாய்-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

காதலியின் வீட்டில் விடிய விடிய தங்கியிருந்த காதலன்..!! கண்டித்த தாயை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சிறுமி..!!

இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் சிறுமி, தன்னுடைய காதலனோடு சேர்ந்து கத்தி மற்றும் கத்திரிக்கோல் உதவியோடு ஷபாவின் நெஞ்சு, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு வீட்டின் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். கொலை செய்யப்பட்ட ஷபாவிற்கு உறவினர் ஒருவர் போன் செய்துள்ளார். ஆனால், போன் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அவரின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, கதவு பூட்டியிருந்தது. கதவுக்கு அருகில் நின்று போன் செய்தபோது, வீட்டிற்குள்ளிருந்து போன் சத்தம் வந்துள்ளார். அப்போது, ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்த உறவினர், இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். பின்னர், போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது ஷபா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

காதலியின் வீட்டில் விடிய விடிய தங்கியிருந்த காதலன்..!! கண்டித்த தாயை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சிறுமி..!!

சிறுமியும், அவரின் காதலனும் வீட்டிலிருந்து அவசரமாக புறப்பட்டுச் சென்றதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்திருந்தார். இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து மும்ப்ரா இன்ஸ்பெக்டர் அசோக், ”ஷபாவைக் கொலை செய்த சிறுமியும், அவரின் காதலனும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மைனர் பெண்ணின் காதலுக்கு ஷபா எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் சேர்ந்து கொலை செய்திருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

பெண்ணின் தலையை கொய்து மார்பகத்தை வெட்டி வீசிய கொடூர சம்பவம்..!

Fri Dec 30 , 2022
கிஸ்தானின் சின்ஜோரோவில் நேற்று இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி, 40 வயது பெண் தலை துண்டிக்கப்பட்டு மார்பகம் துண்டிக்கப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட்டர் கிருஷ்ண குமாரி, 40 வயது விதவை கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அவளது உடல் மிகவும் சிதைந்துள்ளது.  அவளது தலை உடலில் உள்ள தோல்களிலும் […]

You May Like