காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் வீட்டிற்கு மணமகள் குடும்பத்தினர் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஹுசூராபாத் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு வீட்டில் இருந்ததால், இருவரும் வெமல்வாரா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சஞ்சனாவின் தம்பி பாலையா ராஜசேகரின் வீட்டிற்கு நண்பர்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, ராஜசேகரின் வீட்டை பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது.
![காதல் திருமணம்..!! இளைஞரின் வீட்டை தீவைத்து கொளுத்திய பெண்ணின் சகோதரர்..!! பகீர் சம்பவம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/06/love-sunset-together-preview.jpg)
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகின. மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராஜசேகர் வீட்டிற்கு தீ வைத்த சஞ்சனாவின் தம்பியை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.